பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஆத்மாவின் ராகங்கள்

ஸ்ெளரி ஸெளரா சம்பவத்தின் போது மகாத்மா கூறிய

அஹிம்சைத் தத்துவம் ராஜாராமனுக்கு நினைவு வந்தது.

வெறுப்புக்கு அடிப்படை உதாசீனம்; குரோதத்துக்கு

அடிப்படை வெறுப்பு, கொலை, கொள்ளைகளுக்கு

   அடிப்படை குரோதம். உதாசீனம் படிப்படியாக மனிதனை அரக்கனாக்குகிறது. கருணையோ படிப்படியாக மனிதனைத்

தெய்வமாக்குகிறது.'

    யோசித்துக் கொண்டே இருந்தவன் எப்போது தூங்கி னோம் என்று தனக்கே தெரியாத ஒரு வேளையில் நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டான். மெத்தை - தலையணைகளின் நளினமான நறுமணங்கள் அவனைச் சுகமான உறகத்திலும் தழுவியிருந்தன. தூக்கத்தில் ஒரு சொப்பனம்.
    ஒரு தேவதை கை நிறைய மல்லிகைப்பூக்களை அள்ளிக் கொண்டு ஓடிவந்து அவன் பாதங்களில் கொட்டுகிறாள்.
     அவன் விலகி நிற்க முயலுகிறான். கோபத்தோடு, "இப்படிச் செய்ய உனக்கு அருகதையில்லை' என்று அவன் கூப்பாடு போடுகிறான்.
  'பாதங்கள், அவற்றை வழிபடுகிறவர்களுக்குச் சொந்தம், என்று சொல்கிறாள் அவள். சொல்லிய அளவில் யாரோ வீணை வாசிக்கிற குரல் கேட்கிறது. அவள் தோற்றம் மறைகிறது; வீணையும் நிற்கிறது. 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' என்று யாரோ மெதுவாக இனிய குரலில் பாடுகிறார்கள். தூக்கம் கலைகிறது.
  ராஜாராமன் எழுந்திருந்து கண்களைக் கசக்கிக் கொண்டு மொட்டை மாடிப்பக்கம் வந்து கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்ப்போது, எதிர்ப்புறம் கைப்பிடிச்

சுவரருகே மதுரம் நின்று கொண்டிருந்தாள். -