பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 139 முடியாத தனிமையும், மனத்தின் வேதனை வெடித்த வெடிப்புமாக இந்த வரிகளை இயற்றும் சக்தியை அவனுக்கு அளித்திருந்தன. இந்த வரிகளை மீண்டும் நினைப்பதிலும், மறப்பதிலும் மறுபடி முயன்று நினைப்பதிலுமாகப் பல தினங்களையே கழிக்க முடிந்தது அவனால். அப்படி ஒரு மயக்கம் இந்தச் சில வரிகளில் இருந்தன. விடுதலையானதும் இதை டைரியில் எழுதிக் கொள்ள எண்ணினான் அவன்.

ஒவ்வொன்றாக மாதங்கள் ஓடின. அவன் விடுதலை யாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக வந்திருந்தபோது, நாகமங்கலம் ஜமீன்தார் காலமாகிவிட்ட செய்தியைப் பத்தர் தெரிவித்தார். அதை ஏன் அவர் தன்னிடம் தெரிவிக்கிறார் என்பது முதலில் அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரத்தில் அது புரிந்தது. புரிந்தபோது வேறொரு தெளிவும் கிடைத்தது. - r

'மதுரம், தனபாக்கியம், மங்கம்மா, மாமாக் கிழவர் எல்லாருமே வீட்டைப் பூட்டிக்கிட்டு, நாகமங்கலம் போயிருக்காங்க தம்பி; வர ஒரு மாசம் கூட ஆகலாம்...'

'போக வேண்டியதுதானே? அவன் குரலில் சிறிது ஏளனம் ஒலித்தது.

'பாவம் தனபாக்கியத்துக்கு இது பெரிய சோதனை."

அவனுக்கு அவர் மேலும் இப்படிக் கூறியது இன்னும் புரியவில்லை. -

'மதுரத்துக்கு இனிமே தகப்பனார் இல்லே...' 'நீங்க என்ன சொல்றீங்க பத்தரே?” நான் சொல்றது புரியலிங்களா தம்பீ?" “ufuເມuມr= நீங்க சொன்னால்தானே?" - 'நம்ம மதுரம், ஜமீன்தார்கிட்ட தனபாக்கியத்துக்குப் பிறந்த பொண்ணு, நாகமங்கலத்தார்தான் அதுக்கு அப்பா