பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 173

'அம்மா நெலைமை மோசமாயிருக்கு. இனிமேல் பிழைப்பான்னு தோண்லை. இந்த நெலைமையிலே நீங்களும் என்னை அநாதையா விட்டுவிட்டு ஜெயிலுக்குப் போயிடாதீங்கோ - என்று மதுரம் ஒரு நாள் தன்னிடம் அழுதிருந்ததை இப்போது ஜெயிலில் நினைவு கூர்ந்தான் அவன். வயது ஆனபின் இறந்தாலும் தாயின் மரணம் எத்தனை மூத்த பின்பும் சகித்துக் கொள்ள முடியாதது. மதுரம் இதில் மிகவும் அதிர்ந்து போயிருந்தாள் - என்பது அவனுக்குப் புரிந்தது.

"வீட்டிலேயே மங்கம்மாவும் மதுரத்தோட மாமாவும் இருக்காங்க. போதாததுக்குப்பிருகதீஸ்வரன் மதுரையிலேயே இருந்தார். பத்தர் வேறே ஆறுதல் சொல்வார். நீ கவலைப்படாம இரு நீ மனோதிடத்தை விட்டுடாம இருக்க வேண்டியது இப்ப முக்கியம், - என்று சிறை யில் உடனிருந்த முத்திருளப்பன் அவனிடம் கூறினார்.

அடுத்த மாதம் பிருகதீஸ்வரனும் பத்தரும் அவர்களைப் பார்த்துவிட்டுப் போகத் திருச்சி ஜெயிலுக்கு வந்திருந்தார்கள். மதுரம் அவர்களிடம் அவனுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பி இருந்தாள். கடிதத்தில் அம்மாவின் மரணத்துக்கு வருந்திக் கலங்கியிருந்ததோடு, அவன் உடல் நலனையும் விசாரித்திருந்தாள் அவள். நாகமங்கலம் ஜமீன்தாரிணியும், தனக்கு ஒரு விதத்தில், சகோதரர்கள் முறையுள்ள ஜமீன்தாரின் மக்களும் ம்னம் மாறிப் பெருந்தன்மையோடு அம்மாவின் மரணத்துக்குத் துக்கம் கேட்டுவிட்டுப் போக வந்திருந்ததையும் கடிதத்தில் அவனுக்கு மதுரம் எழுதியிருந்தாள். தான் விடுதலையாகி வரும்வரை மதுரையிலேயே தங்கி இருக்கும்படி பிருகதீஸ்வரனை வேண்டிக் கொண்டான் அவன். ‘. . . . . . .

"நீயே என்னை ஊருக்குத் திரும்பிப்போ என்று சொன்னாலும் நான் இப்போ மதுரையிலிருந்து போக மாட்டேன் ராஜா ஆசிரமக் கட்டிட வேலையை