பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 153 பெருக்கை வளர்க்க முடியும் என்பதற்கு அவர்கள் உதாரண

மாயிருந்தனர். ஒருவர் அன்பு செய்தாலும், அன்பு

செய்கிறவனும் செய்யப்படுகிறவனும் உலகில்

இரகசியமாகவே ஒரு சுமுகமான வித்தைப் பயிர் செய்து

வளர்த்துவிட முடியும் போலிருக்கிறது. உலகில்

இரகசியமாகவே பயிராகும் நல்லுணர்வுப் பயிர்களில் மிகப்

பெரியது தூய அன்புதான் என்று தோன்றியது.

அடுத்த வருட ஆரம்பத்தில் அவன் காரைக்குடியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ்-க்குப் போய்விட்டுத் திரும்பிய போது மதுரத்தின் தாய் தனபாக்கியம் தேக அசெளக்கியப்பட்டு படுத்த படுக்கையாயிருந்தாள். காரைக்குடிக்கு வந்திருந்த பிருகதீஸ்வரன் அவனோடு மதுரைக்கு வந்திருந்தார். காரைக்குடி காங்கிரஸில் தீரர் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜ் காரியதரிசியாகவும் வந்தது ராஜாராமன் உட்பட மதுரைச் சீமைத் தேச பக்தர்களுக்குப் பெரு மகிழ்ச்சியை உண்டாக்கியிருந்தது. மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக ஆசிரமம் அமைப்பதைப் பற்றி ஆலோசனைகளை மீண்டும் நினைவூட்டினார் பிருகதீஸ்வரன். அதைப் பற்றித் திட்டமிடவே அவரை மதுரைக்கு அழைத்து வந்திருந்தான் ராஜாராமன். மதுரத்தின் தாய் படுத்த படுக்கையாயிருக்கவே, அவர்கள் கவனம் ஆசிரம ஏற்பாடுகளில் செல்ல முடியாமல் இருந்தது. மகாத்மாவின் ஆசிபெற்று வைத்தியநாதய்யர் ஆலயப் பிரவேச ஏற்பாடுகளுக்காக அவன் போன்ற தொண்டர்களின் ஒத்துழைப்பை நாடினார். மீனாட்சி கோவிலில் அப்போதிருந்த டிரஸ்டி ஆர்.எஸ். நாயுடு அதற்கு மிகவும் ஒத்துழைத்தார். . -

ஏறக்குறைய அதே சமயம் காந்திமகான் வார்தா சேவாசிரமம் அமைக்கும் முயற்சியில் இருப்பதை அறிந்து தங்கள் முயற்சிக்குச் சுபசூசகமாக நண்பர்கள் அதைக் கொண்டனர். ஏற்கெனவே ராஜாராமனும் பிருகதீஸ்வரனும், ராமசொக்கலிங்கத்தின் விருந்தினராக அமராவதி புதுாரில் மகாத்மா வந்து தங்கியிருந்தபோது, இதுபற்றிக் கூறி