பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் தா.வே. வீராசாமி நோக்கில் இந் நாவல்....

'நீண்ட சுதந்திரப் பயணத்தில் காந்திராமன் தன் வாழ்வைத் தியாகத் தீயாக வார்க்கிறான். அவனுடைய தியாகத் தீ மேலும் சுடர் விட்டு எரியத் தன் வாழ்வையே அவ்வேள்வியில் நெய்யாகப் பெய்து விடுகிறாள் மதுரம். இல்லறத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து புலனின்பம் காணாமலேயே அகப்புறம் தழுவிய வெற்றியைக் காண்கின்றனர். மதுரம் மறைந்தாலும் அவளுடைய மதுர இசை மறையாமல் காந்திராமனின் அறிவூட்டும் பணியாக மலர்ந்து விரிந்து அவனுடன் ஒன்றிப் போகிறாள். காந்தியின் ஆற்றல் 'ஆத்மாவின் ராகங்களை எப்படி இணைக்க முடிந்தது என்பதைக் காட்டுகிறது. இந்த நாவல்." -

(தமிழில் சமூக நாவல்கள், பக்கம் : 156)

'இந் நாவலில் பல்வேறு நிலையில் போராட்டக் களங்கள், சிறைச்சாலையின் நிலைகள் ஆகியவை வெளிப்படுகின்றன. காந்தியின் ஆற்றல் நாவலின் புறநிலையிலிருந்து ஆத்மாவின் ராகங்களை எப்படி இணைக்க முடியும் என்பதை இந்நாவல் காட்டுகிறது.'

(தமிழ் நாவல் இயல், பக்கம்:71)