பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ஆத்மாவின் ராகங்கள்

'நீ சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் காந்தி மகானைப் போல் ஆத்மபலத்தை நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய், சுபாஷ் சந்திர போஸ்ைப்போல் மன வலிமையையும், உடல் வலிமையையும் நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய் விட்டால் நாளைய இந்தியாவை என்னால் நினைக்கவே முடியவில்லை ராஜா...'

'கீதையைச் சொல்வதற்கு ஒரு பரமாத்மாவும் சத்தியத்தையும் அகிம்சையையும் சுட்டிக் காட்டுவதற்கு ஒரு மகாத்மாவும் தான் இங்கே பிறக்க முடியும் போலிருக்கிறது...'

காரணம் அதில்லை ராஜா காந்தி ஒரு தேசிய மகா முனிவரைப் போல் அகங்காரத்தையும், நான் எனது என்னும் உணர்வையும் அழித்துவிட்டு அப்புறம் ஒரு குழந்தையின் மனத்தோடு அரசியலுக்கு வந்திருக்கிறார். இந்த நாட்டின் தவத்துக்கு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட விரத நியமங்களை அரசியலுக்கும், தேசபக்திக்கும் கூட ஏற்று அங்கீகரித்துக் கொண்டு ஒரு தவத்தோனின் உடை, தவத்தோனின் உணவு, தவத்தோனின் பழக்க வழக்கங்களோடு இந்தியாவில் உலாவுகிறார் அவர். அகங்காரத்தை அழித்து விட்டு இப்படித் தவம் செய்பவர்களைப் போல அரசியலுக்கு வருகிறவர்கள் நாளைக்கும் இங்கே இருப்பார்களா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. இந்தியாவின் எதிர்காலம்: - என்றார் பிருகதீஸ்வரன். - -

"யாருக்குத் தொண்டனாகும் மனோதிடம் இருக்கிறதோ அவனே தலைவனாக முடியும். மகாத்மாவுக்கு அது பரிபூரணமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் இருக்கும் போது அதற்குத் தயாராகி விட்டார் அந்த மகாமுனிவர்..." என்றார் முத்திருளப்பன். குருசாமி எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கட்சி அரசியலிலிருந்து அவர்கள் வழி மெல்ல மெல்ல விலகி