பக்கம்:அருளாளர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 அருளார்கள்

காலமே! உன்னை என்று காண முடியும்? என்று பெருமான் கூறும்பொழுது கொஞ்சம் வியப்படையத்தான் வேண்டியிருக்கிறது. இறைவனைக் காலம் கடந்தவன், ‘காலகாலன்” என்றெல்லாம் கூறுவது மரபு. ஆனால், ஞாலமும் விசும்பும் வந்துபோதற்குரிய 'காலம்’ என்று கூறுவது புதுமை என்பது மட்டுமன்று;ஐன்ஸ்டீனுக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னரே அவர் கண்ட கனவைக் கண்டதுபோல் அல்லவா இருக்கிறது? என்றும் உள்ளவனாகிய இறைவனை என்றும் உள்ளதாகிய காலம் என்று குறிப்பிடுவது எவ்வளவு பொறுத்த முடையது?

ஐன்ஸ்டீன் கண்ட காட்சியில் காலத்தில் வந்து போம் ஞாலம் காட்சியளிக்கிறது. விஞ்ஞானி தனது 'தொலை நோக்கி'யின் மூலம் கற்பனைக்கு அடங்காத தூரத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஒர் உலகைக் காணும்பொழுது இன்று இவ்வுலகம் இருக்கும் நிலையைக் காணவில்லை; காணவும் முடியாது. அவனுடைய ஒப்புயர்வற்ற அந்தத் தொலைநோக்கி 50 கோடி ஒளி ஆண்டுகட்கு முன் செல்கிறது. அன்று அந்த உலகம் எவ்வாறு இருந்ததோ அதையன்றோ இன்று காணுகிறது; காட்டுகிறது. உலகில் கல்தோன்றி மண் தோன்றாத அந்த நாளில் அத்தூர உலகில் இருந்து புறப்பட்ட ஒளியன்றோ இன்று விஞ்ஞானியின் தொலை நோக்கியில் பிரதிபலிக்கிறது. பன்னூறு ஆண்டுகளின் பின்னர் அவ்வுலகம் அழிந்து கூட இருக்கலாம். ஆனால், அவ்வழிவை நாம் அறிய இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகும்? ________________

  5 When the astronomer peers through his telescope he looks not only outward in space but backward in time. His sensitive cameras can detect the glimmer of island.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/61&oldid=1291532" இலிருந்து மீள்விக்கப்பட்டது