பக்கம்:அருளாளர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் 79

இங்ஙனம் பிறர் கண்டு வியக்கும் முறையில் இறைவன் இவர்களிடையே வந்து தங்கிவிடுதலின் இவர்கள் செயலெல்லாம் இறைவன் செயலென்றும், இவர்கள் பேச்செல்லாம் இறைவன் சொற்களென்றும் கூறுகிறார்கள். அவ்வாறு கூறுவதில் தவறு ஒன்றும் இல்லையன்றோ? இந்த அடிப்படையில்தான் ஞானசம்பந்தர் தம் பாடலைப் பாடினார். வானில் அரசாள்வர் ஆணை நமதே என்றும், நம்மாழ்வார் ஈத்த பத்தியை ஒத்த வல்லார்க்கு இடர் கெடுமே (10, 1, 1) என்றும் வடிவமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம், முடிவு எய்தி நாசங் கண்டீர்கள் எம் காணலே (9, 6, 1) என்றும் கூறிச் சென்றனர்.

இனி இராவணன், இரணியன் போன்றவர்களும் நான் என்ற பொருளைக் கரைத்தவர்களே என்று கூறினோமன்றோ? ஆனால் ஆழ்வார்கள் நான் என்ற அகங்காரத்தை ‘அவன்’ என்ற பரமாத்மாவில் கரைத்தவர்கள் என்று கூறினோம். இரணியன் போன்றவர்கள் அண்ட சராசரம், இறைவன் ஆகிய அனைத்தையும் தம்முடைய நான்’ என்ற அகங்காரத்தில் கரைத்தவர்களாம். இரணியன் உடைய நான்’ என்ற அகங்காரம் அண்ட பிண்ட சராசரம், முழுமுதற்பொருள் ஆகிய அனைத்தையும் தன்னுள் அடக்க முயல்கின்ற ஒரு பேரகங்காரமாகும். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுடைய அகங்காரம் மிகச் சிறியதாகும். அந்தச் சிறிய அகங்காரம் ஓரளவு விரிந்து ‘மமகார'மாக (என்னுடையது) விரிகின்றது. பின்னர் அந்த மமகாரம் தொடர்புடையாரிடத்து அன்பாகப் பரிணமிக்கிறது.

ஆனால் இரணியனுடைய அகங்காரம் மிகமிகப் பெரியது. அது மேலும் விரிவதற்கு இடனின்றி விரிந்துள்ளது. மமகாரமாகியது என்னுடையது என்று கூறுவதற்குக் கூட இடமில்லாமல் விரிந்து அனைத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/88&oldid=1291497" இலிருந்து மீள்விக்கப்பட்டது