பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஆத்மாவின் ராகங்கள் பிரியமாகத் தேடி வாங்கிப் படிக்கிறேன். ஆனாலும், நான் ஒரு கவி இல்லை. ஆனால், உங்களுக்கு எழுதுகிறோம் என்ற ஒரே காரணத்தினால், என்னுடைய கடிதத்தை நான் விசேஷ சிரத்தையோடும் ஒரு கவியின் உற்சாகத் தோடும் எழுத முற்படுகிறேன். எழுதுகிறவர்களின் திறமை யினாலன்றி, எழுதப்படுகின்றவர்களின் சிறப்பால் மட்டுமே சில விஷயங்களுக்கு கவிதையின் அந்தஸ்து வந்து சேரும் போலிருக்கிறது. இந்தக் கடிதத்திலும் அப்படி ஏதாவது ஒர் அந்தஸ்து இருக்குமானால் அதற்கு இதை எழுதுகிற என் திறமை காரணமல்ல. நான் இதை யாருக்கு எழுதுகிறேனோ அவருடைய பெருமை தான் அதற்குக் காரணமாக இருக்கும்.

பத்தர் என்னிடம் நீங்கள் கைதாகிவிட்ட செய்தியை வந்து சொன்ன போது நான் அழுதேன்.

'என்னம்மா, நீயே இப்படிப் பச்சைப்புள்ளே கணக்கா அழுதா எப்படி? எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்ற மனோபலம் உனக்கு உண்டுன்னு அவர் சொல்லிட்டுப் போறாரு, ' என்றார் பத்தர். உடனே நீங்கள் அப்படி எனக்கொரு கட்டளை இட்டிருந்தால், அதை நான் நிறைவேற்ற வேண்டியது என்னுடைய முதல் கடமை என்று நான் உணர்ந்தேன். நான் உங்களுக்குக் கட்டுப்பட்டவள். உங்கள் சொற்படி நடக்க விரும்புகிறவள். நீங்கள் விடுதலையாகி வருகிறவரை சகல காரியங்களையும் நான் கவனித்துக் கொள்கிறேன். சிறைவாசம் என்ற ஒரு கவலையைத் தவிர வேறெந்தக் கவலையையும் நீங்கள் படக்கூடாது. நீங்கள் விடுதலையாகி வந்து, உங்களுடைய கம்பீரத் திருவுருவத்தைத் தரிசிக்க ஒவ்வொரு நாளும் நான் ஏங்கிக் கொண்டிருப்பேன் என்பது ஒன்று மட்டும் உங்களுக்கு நினைவிருந்தால் போதும். பக்கத்தில் இருக்காவிட்டாலும், மானnகமாக நானும் உங்களோடு இருந்து அந்தச் சிறைவாசத்தை அனுபவிப்பதாகவே எனக்குள் பாவித்துக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் இந்த மாதமுடிவில் பத்தரைக் கடலூருக்கு அனுப்புவேன்.