பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ஆத்மாவின் ராகங்கள்

நாஸிக்லேருந்து திரும்பிவர போது இங்கே வரேன்னு மதுரையிலேர்ந்து புறப்படறப்பவே கடிதாசி போட்டிருந்தே. நீ திரும்பி வரபோது உடம்பு சரியாயிடும்; உன்னோடவே மதுரை வரலாம்னு இருந்தார்..."

ராஜாராமன் மாமிக்கு ஆறுதல் கூறிவிட்டுத் தன் மனதுக்கு அப்படி ஆறுதல் கூறிக்கொள்ள முடியாமல் கண்ணிர் விட்டான்.

'எனக்குத்தான் மாமா இல்லாமே ரொம்ப ரொம்பக் கஷ்டம் மாமீ. வலது கை ஒடிஞ்ச மாதிரித்தான் இனிமே..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு. கடிதம் போட்டு ஆசிரமத்திலிருந்து குருசாமியையும் முத்திருளப்பனையும் புதுக்கோட்டைக்கு வரவழைத்தான்

★ 大 *

புதுக்கோட்டையில் பிருகதீஸ்வரனுடைய காரியங்கள் முடிகிறவரை இருந்துவிட்டு ஆசிரமத்துக்குத் திரும்பிய பின்பு துக்கமும் தனிமையும் வாட்டவே, ராஜா ராமனுக்கு ஆசிரமத்தில் இருப்புக் கெர்ள்ளாமல் உடம்பும் மனமும் தவித்துப் பறந்தன. பிருகதீஸ்வரனைப் போல் உலக அனுபவமும், முதுமையும், சாந்த குணமுமுள்ள ஒருவர் இல்லாமல் அந்த ஆசிரமத்தை நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம் என்பது போகப் போக அவனுக்குத் தெரிந்தது. அவனுக்குச் சிரமமே கொடுக்காமல் எல்லா நிர்வாகப் பொறுப்பையும், கஷ்டங்களையும் இதுவரை அவர் தாங்கிக் கொண்டிருந்தார். இப்போது எல்லாப் பொறுப்பையும் அவனே தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. நெருங்கியவர்களும் வேண்டியவர்களும் ஆத்மார்த்தமானவர்களும் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டிருந்தார்கள். உலகில் தான் மட்டுமே தனியே