பக்கம்:அருளாளர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 அருளாளர்கள்

பகுதியில் உள்ள உண்டைகளின் பெருக்கம் நூறு கோடியின் மேம்பட்டன' என்பதை இற்றை நாள் வானநூலார் ஒப்புக்கொள்வது மட்டுமன்று; அவை எண்ணி மாளாதவை என்றே கூறுகிறார்கள். பெருமானும் நூற்றொரு கோடியின் மேற்பட என்ற சொல்லால் அவை எண்ணி மாளாதன என்ற கருத்தையே வலியுறுத்துகிறார்.

மனத்திற்கு மயக்கந்தரும் இக்கணக்கு ஒருபுறம் நிற்க. அடிகள் பாடலின் நான்காவது அடியின் கடைசிச் சொல் நம் வியப்பை இன்னும் மிகுதிப்படுத்துகிறது. அச்சொல் ‘விரிந்தன' என்ற ஆழமான பொருளையுடைய சொல். ஏனைய நாடுகளோடு மிகுதியும் தொடர்புடைய தமிழர்கள் அற்றை நாளில் வான நூற் புலமையுடையவர் களாக இருந்திருப்பர் என்றே நினையவேண்டி உளது, ‘விரிந்தன' என்ற இந்த ஒரு சொல்லால், 'கோப்பர்நிகஸ்’ (Copernicus) உலகம் உருண்டை வடிவானது என்று கூறுமுன்பே இத்தமிழர் அண்டத்தில் உலவும் உலகங்கள் அனைத்தும் உருண்டை வடிவம் உடையன என்று கூறியதைக் கண்டோம். அதனினும் பார்க்க வியப்பான தாகும் 'அவ்வுண்டைகள் விரிந்தன' என்று கூறியது. இற்றைநாள் வான் நூலாரும் அண்டம் விரிந்து கொண்டே செல்கிறதென்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

“அண்டத்தில் அரைவிட்டம் ஒளி அலைகளை விட வேகமாகப் பெருகிக் கொண்டே செல்லுகிறது; இன்னும் வேகமாகப் பெருக ஏதுவும் உண்டு. இப்பொழுதுகூட ஓரிடத்திலிருந்து புறப்பட்ட ஒர் ஒளி அலை

the rate of 185,000 miles a second would in this universe, describe a great cosmic circle and return to its source after a little more than 200 billion terrestrial years.:- 'Universe & Dr. Einstein’ by Lincoln Barnett, Page 105.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/57&oldid=1291585" இலிருந்து மீள்விக்கப்பட்டது