பக்கம்:அருளாளர்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
230*அருளாளர்கள்

ஏறத்தாழ இருபது தடவைகளுக்கு மேல் சுவாமிகளைத் தரிசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான்கைந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பேன். ஆதலால் அன்றன்று என் சொற்பொழிவு முடிந்தவுடன் அந்த மகானின் சந்நிதிக்குச் சென்று அரை மணியோ ஒருமணியோ அவரின் திருவடிக்கீழ் அமர்ந்து அவரின் அருளைப்பெறும் வாய்ப்புப் பெற்றிருந்தேன். அவற்றைத் தொகுத்துக் கூறுவதானால் ஒரு நூலாகவே ஆகிவிடும். எனவே மூன்று நிகழ்ச்சிகளை மட்டும் அடியேன் தருகிறேன். இப் பெருமகனார் எல்லாம் வல்ல சித்தர் என்பதை நிரூபிக்க இந்நிகழ்ச்சிகள் துணைபுரியும் என்று நம்புகிறேன்.

ஒருமுறை திருவாளர் சிறீகாந்தா என்பவர் யாழ்ப்பாணத்தில கலெக்டராக பணிபுரிந்து வந்தார். அவரும் அவர் மனைவியாரும் சுவாமிகளிடம் பெரும்பக்தி கொண்டவர்கள். அவர்களுடன் தங்கியிருந்த நானும் சுவாமிகளைப் பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைவேன். இம்முறை கதிர்காமத்தில் ஆடிவேல் விழா நடைபெறுகின்ற நாளாகும். திருவாளர் சிறீகாந்தா எங்கிருந்தாலும் ஆடிவேலுக்கு கதிர்காமம் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை ஊரைவிட்டுப் போகக் கூடாதென்று அரசு ஆணை கட்டிப் போட்டதால் போக முடியவில்லையென்று வருந்தினார். நெருங்கிய நண்பராகிய அவர் “அ. ச. ஐயா! யோகசுவாமி கள் தவறாமல் ஆடிவேலுக்கு கதிர் காமம் போய் விடுவார்கள். இந்த ஆண்டும் போயிருப்பார்கள் நமக்கோ போகமுடியவில்லை. சுவாமிகள் தங்கி இருக்கும் குடிலுக்குச் சென்று அவர்கள் அமரும் பீடத்திற்கு ஒரு கும்பிடுபோட்டு வரலாம் வாருங்கள்" என்றார். அதை ஏற்றுக்கொண்டு நான் புறப்பட நானே காரை ஓட்ட ஏற்றுக்கொண்டேன். முதல் இருக்கையில் சிறீகாந்தாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/241&oldid=1292405" இலிருந்து மீள்விக்கப்பட்டது