பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஆத்மாவின் ராகங்கள்

'அப்ப நீங்க ஒண்னும் மனசிலே வச்சுக்கலியே?’’

‘'வேலை இருக்காம். மகாநாடு முடியிறவரை அங்கேயே தங்க வேண்டியிருக்குமாம். வேற கோபம் எதுவும் இல்லியாம்னு போய்ச் சொல்லிடட்டுமா தம்பீ9'

'சொல்லுங்கள் என்று சம்மதிக்கவும் செய்யாமல்சொல்லக்கூடாது என்று மறுக்கவும் செய்யாமல் உள்ளே திரும்பி விட்டான் ராஜாராமன். 'அப்ப நான் போயிட்டு வரலாமில்லையா? ' என்று பத்தர் இரைந்து கேட்ட கேள்விக்கு மட்டும் 'சரி மகாநாட்டுக்கும் ஊர்வலத்துக்கும் வாங்க!' என்று உள்ளே நடந்து போகத் தொடங்கி யிருந்தவன், ஒருகணம் திரும்பி அவரைப் பார்த்து மறுமொழி கூறினான். பத்தர் புறப்பட்டுச் சென்றார். மகாநாட்டிற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்ததால் முத்திருளப்பன், குருசாமி எல்லாருமே கமிட்டி ஆபீஸில்தான் கூடினர். பத்தர் வந்து விட்டுப் போன மறுதினம் ஏதோ காரியமாக வாசகசாலைக்குப் போய் விட்டு அப்புறம் கமிட்டி அலுவலகத்துக்கு வந்த முத்திருளப்பன், ராஜா மதுரத்து மேலே ஏதாவது கோபமா?' என்று அவனைக் கேட்டபோது கொஞ்சம் தயங்கிவிட்டு 'அதெல்லாம் ஒண்ணுமில்லே' என்று பதில் சொன்னான் ராஜாராமன. - -

தமிழ் மாகாண மகாநாடு மதுரையில் கூடியது. பல ஊர்களிலிருந்தும் தேச பக்தர்கள் குழுமினார்கள். சத்திய மூர்த்தி தலைமை வகித்தார். நகரம் முழுவதுமே வந்தே மாதர முழக்கமும், மகாத்மா காந்திக்கு ஜே!' என்ற கோஷமும் நிரம்பியிருப்பது போல் தோன்றியது. ஊர்வலமும் மிகப் பிரமாதமாக நடைபெற்றது.