பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

61


தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் குருகு என மலரும் பெருந் துறை விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

- மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதன் குறு 226 "தோழியே, இரவுதோறும் விளங்கிய அலைகளால் மோதப் பட்ட தாழையினது வெள்ளிய பூவானது, நாரையைப் போல் மலரச் செய்தற்கு இடமாகிய பெரிய துறைகளைக் கொண்ட அகன்ற நீர்ப் பரப்பை உடைய தலைவனாகிய சேர்ப்பனோடு அளவளாவி நகுவதற்கு முன்பு, தாமரை மலரை ஒத்த கண்களும், மூங்கிலைப் போல வெற்றியை உடைய அழகு பெற்ற தோள்களும், பிறை என்று கருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும் மிகவும் நல்லனவாய் இருந்தன அந் நிலை இப்பொழுது இல்லாதாயிற்றே" என்று தோழியை நோக்கித் தலைவி வருந்திக் கூறினாள்.

131. அவன் நேற்றும் வந்து திரும்பினான்

பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி

வாள் முகம் துமிப்பவள் இதழ் குறைந்த

கூழை நெய்தலும் உடைத்து, இவண் -

தேரோன் போகிய காணலானே. - ஒதஞானியார் குறு 227

“தேரில் வந்த தலைவன் மீண்டு சென்ற கடற்கரைச் சோலையானது, பூனைப் பதித்தாற் போன்ற பொன்னா லாகிய விளிம்பை உடைய சகடத்தின் வாளைப் போன்ற வாய்ப்பகுதி துண்டித்ததலினால், வளப்பம் பொருந்திய இதழ்கள் ஒடிக்கப் பட்ட குறையுடைய நெய்தற் பூக்களை உடையது” என்று தலைவன் மறைவில் இருக்க, தோழி தலைவிக்கு உணர்த்தினாள்

132. எவ்விதம் ஆற்றியிருந்தாள் வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை, குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில், திரை வந்து பெயரும் என்ப - நத் துறந்து