பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

181


யான் உனக்குத் தலைவியின் மெய் வேறுபாட்டிற்கு இது வல்லாது யான் அறிந்த காரணம் வேறு ஒன்றும் இல்லா மையை நீ அறியச் சொல்லி, வளைந்த கழிகள் பொருந்திய புகாரிடத்துள்ள வருணனான தெய்வத்தை நோக்கிப் பொய்க்க ஒண்ணாத சூள் செய்து தருவேன் என்று தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நின்றாள்.

^ 281. இரவில் இங்குத் தங்குவாய் நெடு வேள் மார்பின் ஆரம் போல, செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு - மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது, அழல் தொடங்கினளே - பெரும - அதனால் கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ, வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது, சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ - பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை அன்றில் அகவும் ஆங்கண், சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?

- நக்கீரர் அக 120 தலைவனே! பெரும் புகழையுடைய திருமுருகனின் மார்பில் சூட்டப்பட்ட முத்துமாலை போலச் சிவந்த வானத்தில் பொருந்தி, மீனை உண்ணும் பசிய காலையுடைய கொக்கினம், வரிசையாய்ப் பறந்து உயர, பகற்பொழுதை மெல்ல மெல்லப் போக்கிப் பல கதிர்களையுடைய ஞாயிறு மேற்குத் திக்கில் மறையும் மலையை அடைந்தது மிக்க நாணத்தை உடைய மெல்லிய ச்ாயல் பொருந்திய இவள், மாண்புற்ற அழகு கெட ஏக்கமுற்று மதர்த்த அழகை யுடைய குளிர்ந்த கண்கலங்க இடைவிடாமல் அழத் தொடங்கி