பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


242. வீட்டிலிருந்தே முதிர்ந்தோம் - விரைக மணவிழா முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின், புறன்.அழிந்து ஒலிவரும் தாழ்இருங் கூந்தல் ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள், அருங்கடி அயர்ந்தனள், காப்பே எந்தை, வேறு பல் நாட்டுக் கால் தர வந்த, பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை, கலி மடைக் கள்ளின் சாடி அன்ன, எம் இள நலம் இற்கடை ஒழியச் சேறும்; வாழியோ முதிர்கம் யாமே. - ஒளவையார் நற் 295 “தலைவியே, கேள். சரிவான மலைப் பக்கத்திலே தீயால் எரிந்து தோன்றும் வள்ளிக் கொடி போல உடலழகு அழிந்து தழைத்து முதுகில் தொங்கும் கரிய கூந்தலையுடைய தோழி 'யர் கூட்டமும் வருந்துகிறது. களவொழுக்கத்தை அன்னையும் அறிந்தாள். அறிந்து நின்னை இற்செறித்துக் காப்பு வைத்தாள். எம் தந்தையின், வேறு பல நாட்டினின்றும் காற்றால் வந்து சேரும் பல வேலைப்பாடுகள் நிறைந்த கப்பல்கள் பெரிய துறையில் விளங்கிக் காணும். அத் துறையிலே வைக்கப் பட்டிருக்கும் செருக்கைத் தரும் கள்சாடி போன்ற என் இளைய அழகு வீட்டுவாயிலிலேயே அழிந்தொழிய யாம் செல்வோம். யாம் எம் இல்லினுள் இருந்தே முதிர்ந்து முடி கின்றோம். யாம் அழகை இழந்து முதிர்ந்து முடிவதற்குக் காரணமாய் இருந்த நீர் நெடுங்காலம் வாழ்க" என்று இற் செறிப்புற்ற தலைவி தலைவனை விரைந்து மணக்க அறிவித்தாள்.

243. அவரே நம் தலைவர்

உரு கெழு யானை உடை கோடு அன்ன, ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்;