பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

179


புதிய நாரைக் கூட்டம் ஒலித்தாற் போன்ற அலர் எழும். குளிர்ந்த இருள் புலர்தலையுடைய விடியற்காலத்தே வெளிச் சென்ற எருமை நெய்தலின் புதிதாய் மலர்ந்த மலரைத் தின்னும் தாழை வேலிகளைக் கொண்ட தோட்டங்களை யுடைய எம் ஆரவாரம் மிக்க ஊரில் எழுந்தது எனவே இனி நீ இரவில் வாராது ஒழிக. என்று தோழி தலைவனைப் பார்த்துச் சொன்னாள்

280. அறியினும் அறிக அன்னை! அன்னை அறியினும் அறிக; அலர்வாய் அம் மென் சேரி கேட்பினும் கேட்க, பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி, கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி, கடுஞ் சூள் தருகுவன், நினக்கே கானல் தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும், வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது இருந்தனமாக, எய்த வந்து, தட மென் பணைத் தோள் மட நல்லிரே! எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்; மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ? என மொழிந்தனனே, ஒருவன், அவற் கண்டு, இறைஞ்சியமுகத்தெம்புறம் சேர்புபொருந்தி, இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த கொழு மீன் வல்சி என்றனம், இழுமென. நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணாமோ? எனக் காலின் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு, நன்னுதால் ஒழிகோ யான்? என அழிதகக் கூறி, யான் பெயர்க' என்ன, நோக்கி, தான்் தன் நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் என்றும் என் மகட்கே. w *so - போந்தைப் பசலையார் அக 110