பக்கம்:அருளாளர்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி: 177

"யானெனும் அகந்தைதான் எள்ளளவு மாறவில்லை

யாதினும் அபிமானம் என் சித்தமிசை குடிகொண்ட தீகையொ டிரக்கமென் சென்மத்து நானறிகி லேன் சிலமொடு தவவிரதம் ஒருகனவி லாயினுந்

தெரிசனங் கண்டும் அறியேன் பொய்த்தமொழி யல்லால் மருந்துக்கும் மெய்ம்மொழி

புகன்றிடேன் பிறர்கேட் கவே போதிப்ப தல்லாது சும்மா இருந்தருள் பொருந்திடாப் பேதை நானே"...

(ஆனந்தமானபரம்-9)

என்று பேசுகின்ற அற்புதத்தைப் பார்க்கின்றபோது கேவலம் கல்வி என்பது ஒருமனிதனை பண்பாட்டில் உயர்த்திவிடும் என்று அன்றும் நம்முடைய பெரியவர்கள் நம்பவில்லை. இன்றும் அது நம்பக்கூடாத ஒன்று ,என்று அற்புதமாகப் பேசுகிறார் இங்கே.

இந்த அளவு பேசிய பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார். தாயுமானவப் பெருந்தகையின் வளர்ச்சி மெளன குருவைக் கண்டதில் இருந்து தொடர்ந்து மேலே சென்று எவ்வளவுக்கெவ்வளவு வாய்மூடி இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு வளர்ச்சி அடைய முடியும் என்பதை அறிந்து கொண்டார் அருணகிரியார். அனுபவத்தில் கண்டுவிட்டவர் ஆகையினால் பேசா அதுபூதியை அடியேன் பெற்று, சித்தத்தின் இருளைத் தீர்க்க வேண்டுமேயானால் ஒரே வழி பேசாமல் இருப்பதுதான் என்ற அற்புதத்தை,

"ஐயா, அருணகிரியப்பா உனைப்போல மெய்யாக ஒரு

சொல் விளம்பினவர் யார்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/188&oldid=1291912" இலிருந்து மீள்விக்கப்பட்டது