பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


292. தலையை இறைஞ்சினாள்

'உறு கழி மருங்கின் ஒதமொடு மலர்ந்த சிறு கரு நெய்தற் கண் போல் மாமலர்ப் பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல், ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று, மை ஈர் ஒதி, வாள் நுதல், குறுமகள்! விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு, மனை புறந்தருதி ஆயின், எனையது.உம், இம் மனைக் கிழமை எம்மொடு புணரின், தீதும் உண்டோ, மாதராய்? என, கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர் கை வல் பாகன் பையென இயக்க, யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில் அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி, சிறிய இறைஞ்சினள், தலையே - பெரிய எவ்வம் யாம் இவண் உறவே.

- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் அக 230 “பெரிய உப்பங்கழியின் பக்கத்தில் கடல் நீரால் மலர்ந்த கண்போன்ற சிறிய கரிய நெய்தல் மலரின் பெரிய மலருடன் கூடிய குளிர்ந்த தழையையுடைய அல்குலையும், கூர்மையான பல்லையும், கரிய கூந்தலையும் ஒளியுடைய நெற்றியையும் உடைய இளைய மகளே! பெண்ணே நீ விளையாடும் உன் ஆயத்தாருடன் புன்னை மரம் வெண்மையான மணலில் உதிர்த்த நுட்பமான பொடியையும் பொன்னாய்க் கருதி இல்லறம் நடத்துவாயாயின், இந்த இல்லறக்கிழமை சிறி தேனும் என்னிடம் பொருந்துவதாயின் உண்டாகக் கூடிய தீமையுண்டோ?” எனச் சொல்லி, விரைந்த செலவை யுற்ற நல்ல குதிரை பூண்ட கொடிஞ்சியை யுடைய தேரைத் திறம் மிக்க பாகன் மெல்லச் செலுத்த, நாம் அவளை அணுகினோம் அணுக, யாம் இங்கே பெரிய துன்பத்தை அடைய, அவள் சிவந்த வரி படர்ந்த மையுண்ட கண்களில் மகிழ்ச்சிக் கண்ணிர் வெளிப்படுவதை மறைத்துத் தன் தலையை அவள்