பக்கம்:அங்கும் இங்கும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

வெளிநாட்டுப் பயணம், அரிய நல்வாய்ப்பு. அது எனக்குக் கிட்டிற்று. சோவியத் ஒன்றியத்துக்கு இரு முறையும். பிரிட்டனுக்கு இரு முறையும், அமெரிக்காவிற்கு ஒரு முறையும் சென்று வரும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்நாடுகளில் என்னைக் கவர்ந்தவை பல.

நான் கண்ட, கேட்டவற்றில் சிலவற்தையாவது எழுதி வைக்க, 'சத்திய கங்கை'யின் ஆசிரியரும் என் நண்பருமான திரு பகிரதன் அவர்களின் அன்பு அழைப்புத் தூண்டிற்று. 'அங்கும் இங்கும்' என்ற தலைப்பில் அவற்றை அவர் 'சத்திய கங்கை'யில் வெளியிட்டார். ஆகவே அவருக்கு என் முதல் நன்றி.

இக்கட்டுரைத் தொகுப்பை நூல் வடிவில் வெளியிட முன்வந்த நியூ செஞ்சுசி நூலகத்தாருக்கு என் உளமார்ந்த நன்றி.

இந்நூலை வெளியிட அனுமதி தந்த இந்திய ஆட்சிக்கும் நன்றியுடையேன். இதில் வரும் கருத்துக்கள் என்னுடையவை. அரசினருடையவை அல்ல. அவற்றிற்கு நானே பொறுப்பு. அவை எவ்விதத்திலும் இந்திய ஆட்சியைச் சாரா.