பக்கம்:அங்கும் இங்கும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

முறையன்று. பலமுறை பார்த்தோம். எழுதியிருப்பது என்ன என்று கேட்கவில்லை. லெனினது பெயரையோ, அவரது சிறப்புப் பெயரையோ எழுதியிருப்பார்கள் என்று நினைத்தோம். அது என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எழவில்லை. 'கடா கன்று போட்டது என்று கேட்டதும், கட்டி விடுகிறேன' என்று பணிவிலே பழக்கப்படுத்தப்பட்ட அரசினர். ஊழியர்கள் அல்லவா. நாங்கள் ? நாள்கள் சில சென்றன.

ஒருபோது, எங்கள் குழுவில் ஒருவராகிய அம்மையார் லெனின் படத்தைக் காட்டி, அதன் அடியில் எழுதியிருப்பது என்ன என்று திடீரெனக் கேட்டுவிட்டார். பதில் வந்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்தது என்ன தெரியுமா? படியுங்கள்! படியுங்கள்! மேலும் மேலும் படியுங்கள் லெனின் படத்தின் அடியில் எழுதியிருந்தது இதுவே.

சோவியத் புரட்சி வீரர் லெனின் எத்தனையோ பேசியிருப்பார்! எத்தனையோ எழுதியிருப்பார்! பொதுஉடமைக் கொள்கைகளைப் பலமுறை விளக்கியிருப்பார்! அவற்றிலே ஒன்றை-ஒரு மந்திரத்தை-ஒரு முழக்கத்தை-ஒர் ஊக்க ஒலியைப் போடாமல்-இதை எழுதிப் போட்டிருப்பது ஏன் ? கல்விக்கூடங்களுக்கு இதுவே பொருத்தம் என்பதாலா? பொது உடைமைப் பால் ஊட்டுவதற்கு பதில், பொறுப்புள்ள தொடக்கநிலை ஆசிரியர் கொடுக்க வேண்டிய தண்ணிரையா கொடுப்பது? இவ்வையங்களையெல்லாம் கொட்டிவிட்டோம். அது நல்லதாக முடிந்தது. சோவியத் ஒன்றியத்தில் கண்ட கல்வி 'அற்புதத்தின் ஆணிவேரை, கப்பை, கிளையைக் காணும் வாய்ப்புக் கிட்டிற்று.

எங்களுக்கு அன்று கிடைத்த, பதிலின், விளக்கத்தின் சாரம் இதோ .

'இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்' என்ற முறையிலே ஜார் ஆட்சி இரஷியாவில் நடந்து வந்தது.