பக்கம்:அங்கும் இங்கும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

'ஆம்; ஆங்கிலக் கல்வி ஆகாது. அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு வந்து, நாட்டுத் தொண்டு செய்வது நல்லது. ஆனால், இக்கொள்கையில் நம்பிக்கையில்லாதவர்கள். ஆங்கிலக் கல்வி பெற விரும்பும் மாணவர்கள். அக்கல்விக் கூடங்களின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மதித்து, அவற்றிற்கு அடங்கி நடப்பதே முறை ஒரே நேரத்தில், அரசியல் ஊழியராகவும். மாணவராகவும் இருப்பது முடியாது'-இதுவே மகாத்மாவின் பதில். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்கலாமா ?

ஆகவே, சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றொரு கேள்விச்சீட்டு சென்றது. அக்கேள்வியென்ன ? 'மாணவர்களில் பலருக்கு நாட்டுப் பற்று உண்டு. இப்போதே நாட்டுத் தொண்டில் ஈடுபடாவிட்டால், அப்பற்று அடியோடு பட்டுப் போகுமே ! மாணவப் பருவம் முடியும்வரை நாட்டுப்பற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், அவர்கள் தேசத் தொண்டர்களாவது எப்படி ?'

இக்கேள்விக்குக் காந்தியார் பதில் கூறினார். சாரம் இதோ :

ஆங்கிலக் கல்வி கற்பதனால் நாட்டை மறக்க வேண்டா ; வெறுக்க வேண்டா. நாட்டுப்பற்றைப் பசுமையாக வைத்துக்கொள்ளுங்கள். படிப்புக்குப் பங்கம் இல்லாமல் பணியாற்றுங்கள். வார. பருவ விடுமுறைகளின்போது, சிற்றுர்களுக்குச் செல்லுங்கள். தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, கதர் உடுத்தல், சமூகத் துப்புரவு ஆகிய ஆக்கப் பணிகளைச் செய்யுங்கள். இவை, சிறந்த நாட்டுத் தொண்டு’ என்றார்.

'எதைப் பெறவேண்டுமானாலும் அதற்குரிய வழியிலே, அதற்குரிய வகையிலே பெற வேண்டும், ஆங்கிலக் கல்வி ஆகாதென்று தாம் கருதினாலும், அதைப் பெற விரும்பு