பக்கம்:அங்கும் இங்கும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து படியுங்கள். இதோ, மாற்றச் சீட்டு ;எடுத்துக்கொண்டு போய், வகுப்பு மாறிப் படியுங்கள், மேலும் சிக்கல் வந்தால் என்னிடம் வந்து சொல்லத் தயங்காதீர்கள். இனிமையோடும், உறுதியோடும், ஆர்வத்தோடும் வந்த பதில் இது.

முதல்வர், வகுப்பு மாற்றச் சீட்டை எழுதிக் கொடுத்தார், அந்த அம்மையாரிடம். அவரும் மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டு சென்றார். நன்றி கூறி விட்டுச் சென்றார். என் பக்கம் திரும்பி, உரையாடலில் குறுக்கிட்டதற்காக, மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியேறினார்.

அவர் கண்களில் நம்பிக்கையொளி வீசிற்று. ஐம்பது வயதிற்குமேல் மதிப்பிடக்கூடிய அந்த அம்மாளின் கண்களிலே நம்பிக்கையொளி. புதுத் துறைக்கல்வி யொன்றைக் கற்றுத் தேறப் போகிறோம் என்கிற நம்பிக்கையொளி.

இங்கோ, இளைஞர்களுக்குக்கூட, நம்பிக்கை இழந்த, வெறுப்பு நிறைந்த கண்கள். எனவே, அழிவு வேலை ஈடுபாடுகள் ! யாரை நோக ?

அந்த அம்மானின், முந்திய, தவறான முடிவைப் பற்றிக் குட்டி உபதேசமொன்று செய்வார். முதல்வர் என்று எதிர்பார்த்தேன். அவரோ அறவுரை நிகழ்த்தவில்லை; அம்மாளின் தவறைக் காட்டுவதன்மூலம், தான் உயர முயலவில்லை. விரைந்து உதவி, உயர்ந்து விட்டார் மாணவியின் ஊக்கத் தளர்வையும் போக்கி விட்டார் ; நம்பிக்கையை வளர்த்துவிட்டார். இவரன்றோ, ஆசிரியர் என்று பாராட்டிற்று என் நெஞ்சம்.

"எவ்வளவு இனிமையாக மாணவிக்கு உதவினீர்கள். அச்சத்தோடும் குழப்பத்தோடும் வந்தவர் ஆண்மையோடும்

அ.இ-5