பக்கம்:அங்கும் இங்கும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97


உள்ளுர்க் கல்விக்கூடம், ‘கிளப்’, பொதுவிடம், எது கிடைத்ததோ, அங்கே, முதியோர் கல்விக்கூடங்களைத் தொடங்கினர் முதியோரைக் கொண்டுவந்து சேர்த்தனர்.

இம் முயற்சியில் பெரும் முட்டுக்கட்டை இருந்தது. தொடக்கத்தில் ஆண்களையே கல்விக் கூடங்களுக்கு இழுக்க முடிந்தது. வழிவழி வந்த பழக்கக் கொடுமையால் ‘கோஷா’ முறையால், குடும்பப் பொறுப்புச் சுமையால், பெண்கள் முதியோர் கல்விக்கூடங்களுக்கு அவ்வளவாகச் செல்ல வில்லை.

இதற்கு என்ன பரிகாரம் ? பெண்களின் வீடு தேடி, கல்வித் தொண்டர்கள் சென்றனர். அவரவர் வீட்டிலேயே. பாடங்கற்றுக் கொடுத்தனர். இரண்டொருவரே படிக்க வந்த போதிலும், அவர்களையும் ஒதுக்கிவிடாது பாடங்கற்றுக் கொடுத்தனர். எழுதப்படிக்க மட்டுமா கற்றுக் கொடுத்தனர்? இல்லை.

தாய்மார்களின் சிந்தையெல்லாம் குழந்தைகளைப் பற்றி யல்லவா ? குழந்தை வளர்ப்பைப் பற்றியும் குடும்ப நலனைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தனர் அன்றாட வேலைக்குப் பயனுள்ள, தையல், பின்னல் வேலைகளும் கற்றுக் கொடுத்தனர்.

முதியோர் கல்வி, குடும்பத்திற்குத் தேவையான அறிவை யும் திறமையையும் சேர்த்துக் கற்றுக் கொடுப்பதை உணர்ந்த பெண் இனம், மெல்ல மெல்ல அக்கல்வியின் பால் இழுக்கப்பட்டது. காலப்போக்கில் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகக் கல்வி பெற்றனர். இன்று ஆணும் பெண்ணும் ஒரு நிறை.

நாடு முழுவதும் விழித்தெழுந்து, பெருந் தலைவர்களே, பெரும் பாடுபட்டுப் பல்லாண்டு தொடர்ந்து அறியாமையை அழிக்கப் பணிபுரிந்ததால், இன்று அந்நாட்டு மக்கள் ‘எங்கள்