பக்கம்:அங்கும் இங்கும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105


பல ஆண்டுகளுக்குப் பின், கோவை நகரிற்குச் சென்றேன். தனியாகவே சென்றேன். கல்வி இயக்குநராகச் சென்றேன்.

நகரத் தொடக்க நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பும் விளையாட்டு விழாவும் சிதம்பரம் பூங்காவில் நடந்தன, அவற்றைக் காணச் சென்றேன். ஒவ்வொரு பள்ளிக் குழுவும் ஒவ்வொரு வகையில் வரவேற்றது. நகர சபைப் பள்ளி ஒன்று புதுமுறையில் வரவேற்றது. மற்றவர்கள் போல் மாலையிட்டு வரவேற்கவில்லை. முடிப்புக் கொடுத்து வரவேற்றது. என்ன முடிப்பு ? பண முடிப்பு ! எனக்கா ? இல்லை. என் கையில் கொடுத்தது, அவ்வளவே. எதற்கு அம் முடிப்பு ? தஞ்சை புயல் நிவாரண நிதிக்கு அது. அந்நிகழ்ச்சிக்கு முன், புயல், தஞ்சை மாவட்டத்தில், கோர விளையாட்டு விளையாடியது.

அந் நகரசபைப் பள்ளியில் படிக்கும் அனைவரும் ஏழைகள் பாட்டாளிகளின் மக்கள். ஆயினும், தஞ்சையில், புயலால் சேதப்பட்டு வாடுவோருக்கு உதவி செய்யத் துடித்தனர். அத்தனை பேரும்-ஒருவர் தவறாது - குறிப்பிட்ட தொகையைக் கொண்டுவந்து கொடுத்தனர். அதைப் பண முடிப்பாக்கி, என் கையில் கொடுத்துப் புயல் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரும் எதற்காகவும் என்னிடம் அதுவரை வரவில்லை. பின்னரும் வரவில்லை.

எலிசபெத், எதையும் எதிர்பார்த்து, என் மனைவியிடம் பேப்பர் கொடுத்தனுப்ப முன் வரவில்லை. இந்தியக், குழந்தைகளின் குறையைக் கேட்டதும் குறைபோக்க முன் வந்தது அவள் உள்ளம். முன்பின் அறியாதவர்களுக்குச் செய்யும் உதவியன்றோ மெய்யான அறம்,

கோவை நகரப் பாட்டாளிகளின் குழந்தைகள், தஞ்சை மாவட்டத்தில் வாடுவோருக்காகத் தியாகஞ் செய்ததும் பெயருக்கல்ல; புகழுக்கல்ல. ஒன்று போட்டு பின்னர் ஒன்பது