பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலூர்ப் புரட்சி

33



பாரி எழுதியது என்ன ? வேலூர்ப் புரட்சிக்குக் காரணம் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கண்மூடிச்செயல்களே என்பதை நாளடைவில் ஆங்கில ஆட்சியே ஒப்புக்கொண்டது. அவ்வுண்மையை இப்புரட்சி சம்பந்தமாக ஆராய்ந்து பார்த்த அத்தனை வெள்ளை வரலாற்று ஆசிரியர்களுமே ஒப்புக்கொண்டுள்ளார்கள். மேலும், அப்புரட்சியின் வேகத்தையும், அது வெற்றி கண்டிருந்தால் நேர்ந்திருக்கக்கூடிய விளைவுகளையும் நம்மைக்காட்டிலும் நாடாண்ட வெள்ளையரே நன்கு உணர்ந்திருந்தனர். இவ்வுண்மைக்கு உரை கல்லாய் விளங்கும் பல கூற்றுகளே ஜி. எச். ஹாட்ங்சன் என்பவர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சென்னை மாநகரில் பெருவணிகராய்த் திகழ்ந்த தாமஸ் பாரியைப்பற்றி (சென்னை உயர்நீதி மன்றத்தின் அருகே உள்ள பாரிஸ் கார்னர் இவர் பெயரால் அமைந்ததே) விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ள வரலாற்று நூலில் காணலாம். அந்நூலில் ஓரிடத்தில் வேலூர்ப் புரட்சி நடைபெற்ற நான்கு நாட்கள் கழித்துத் தாமஸ் பாரி தம்முடைய வெள்ளை நண்பர் ஒருவருக்கு வரைந்த விளக்கமான கடிதம் ஒன்றில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"யாராவது இப்படிப்பட்ட அவலமான உத்தரவுகளைப் பிறப்பிப்பார்களென்று நீங்கள் கருத முடியுமோ? ஆனால் உண்மை என்னவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/35&oldid=1138832" இலிருந்து மீள்விக்கப்பட்டது