பக்கம்:அங்கும் இங்கும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. லெனின் நூலகம்

மாஸ்கோ நகரத்துக் காரோட்டியின் கல்வி ஆர்வத்தை வியந்தவாறே, எங்களுடன் வந்த மொழி பெயர்ப்பாளரைப் பார்த்து. " இந்த விஞ்ஞான நூல், கரோட்டியே சொந்தமாக வாங்கியதா ? அல்லது இரவலாகப் பெற்றதா ?" என்று வினவினேன். அதை அவர் காரோட்டியின் இரஷிய மொழியில் கேட்டார். காரோட்டியின் பதிலை ஆங்கிலத்தில் கூறினார். பதில் என்ன ?

"நான் படிக்கும் இவ்விஞ்ஞான நூல் நூலகத்திலிருந்து இரவலாகப் பெற்றதல்ல. விலைபோட்டு வாங்கியது. இதோ பாருங்கள் எவ்வளவு உறுதியான கட்டு, விளக்கமான படங்கள், உயர்ந்த படங்கள் அத்தனையும் அழகான அச்சிலே; உயர்ந்த தாளிலே. இவ்வளவு உயர்ந்த நூலுக்குப் போட்டிருக்கும் விலையோ மிகக் குறைவு" எந்த நாட்டிலும் இவ்வளவு மலிவாக உயர் விஞ்ஞான நூல்கள் கிடைக்கா. எல்லோரும் வாங்கக்கூடிய அளவுக்கு குறைந்த விலையிலேதான் எங்கள் நாட்டு நூல்கள் வெளியாகின்றன.

இந்த பதில் இட்டுக் கட்டிப் பேசிதல்ல; உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. நம் நாட்டில் பதினைந்து ரூபாய்க்கும் வாங்க முடியாத நூல்களை அங்கு மூன்று நான்கு ரூபாய்களுக்கு வாங்கிவிடலாம் என்பதை விசாரித்து அறிந்து கொண்டோம்.