பக்கம்:அங்கும் இங்கும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92


மேற்கொள்ள வேண்டிய பணி சிறியதா ? இல்லை; பெரியது. நான்கில் மூவர் தற்குறி என்றால், நோயின் விரிவு விளங்காது. அன்றிருந்த பதினாறு கோடி மக்களில் பன்னிரண்டு கோடி மக்கள் தற்குறிகள். பன்னிரண்டு கோடி முதியோருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது, சில ஆண்டுகளுக்குள் கற்றுக்கொடுப்பது என்றாலே பலருக்குச் சிரிப்பு வரும். கனவு என்று ஒதுக்கிவிடத் தோன்றும்.

பெருந்தொடர்மலை போல், ஒங்கி உயர்ந்துள்ள தற்குறித் தன்மையைக் கண்டு மலைக்கவில்லை, தயங்கவில்லை, பின்னடையவில்லை சோவியத் மக்கள். அதன் மேல் போர் தொடுத்தனர். பெரும் போர் தொடுத்தனர். இங்கும் அங்கும் சிற்சில நகரங்களில் மட்டுமல்ல, பட்டி தொட்டிகளில் எல்லாம் தற்குறித் தன்மையை அழிக்கும் போர் நடந்ததாம். நாட்டின் எல்லாப் பக்கங்களிலும் மிகத் தீவிரமாக நடந்ததாம்.

இத்தனைக் கோடிப் பேரைப் படிக்க வைக்க எத்தனை இலட்சம் ஆசிரியர்கள்,-முதியோர் கல்வி ஆசிரியர்கள் - தேவைப்படுவர். அத்தனை இலட்சம் ஆசிரியர்கள் இருந்தனரா ? இல்லையாம். பின்னர் என்ன செய்தனர்?

எழுத்தறிவு இயக்கத்தை, ஆட்சியின் திட்டமாக ஏற்றுக் கொண்டதும், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், இந்தப் பொதுப் பணிக்காகத் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் உதவ முன் வந்தனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும், இந்த ஞான வேள்வியில் ஈடுபட முன் வந்தனர்.

ஆயினும், மேலும் பலர் தேவைப்பட்டனர். வேண்டுகோள் எழுந்தது. நாட்டாட்சியின் உயர்மட்டத்திலிருந்து வேண்டுகோள் எழுந்தது. பலன் விளைந்தது. ஆசிரியர் அல்லாத பலரும் இவ் வேள்வியில் ஈடுபட முனைந்தனர். படித்தவர்களிலே பல இலட்சம் பேர், அறியாமையை