பக்கம்:அமிர்தம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘மச்சான்’ அகப்பட்டுக்கொள்ள ஏதுவாகவிருந்த செட்டியாரை நிந்தித்தாள் அவள்.

மகளின் இன்பச் சிரிப்பில்-கிள்ளை மொழியில்-விளையாட்டில் புருஷனின் பிரிவைத் தேற்றிக்கொண்டாள் காவேரி. ‘வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி’ காலத்தை விரட்டிவிடப் பார்த்தாள். எனினும் முடிகிறதா, என்ன சி. வீடுகளில் கைவேலை செய்து பிழைக்கலாஞள். .

காவேரிக்குச் சோறு கண்ட இடம் சொர்க்கலோக மாகிவிட்டது. அவளது கஷ்ட நிலையைக் கேள்விப்பட்டு மனம் இளகிய ரேஷன் கடைச் செட்டியாரின் மனைவி, அவளேத் தன் வீட்டுக்கு அழைத்துக் கைகொடுத்துதவினுள். “காவேரி, எங்க வீட்டுச் செட்டியார் செய்தது. செய்துவிட்டார். அதை மனசிலே இனியும் வச்சிக்காதே. என்னமோ நடந்தது நடந்து போச்சு. உன் புருஷன் விடு தலை கிடைத்து வெளியே வந்ததும் நம்ம செட்டியாரையே ஒரு வழிபண்ணித் தரச்சொல்லுகிறேன். உன் மச்சான் வரமட்டும் இங்கேயே சாப்பிட்டுக்கிட்டு இரு” என்று. அந்த அம்மாள் வேண்டிக்கொண்டாள்.

இந்த வரவேற்பைக் கண்டு காவேரி பிரமித்தாள். அவள் உள்ளமும் மலர்ந்தது. ஆம்; விஷம் தோன்றிய பாற்கடலில் தானே அமிர்தமும் தோன்றியது!

“காவேரி, உனக்குச் சேதி தெரியுமா? நம் நாடு குடியாசானதுக்காகச் சாதாரணக் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யப்போகிருங்களாம் நம்ம சர்க்காரிலே. பேப்பரிலே போட்டிருக்குதுன்னு செட்டியார் சொன்னர், நிச்சயம் உன் புருஷனும் இன்னிக்கு, நாளக்கு வந்துடலாம்” என்று செட்டியாரின் மனைவி சொல்லக் கேட்டதிலிருந்து காவேரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தன் கணவனுக்கு விடுதலை கிட்டும் நாளே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவளுக்கு அச்செய்தி ஆனந்தத்தை ஊட்டிற்று.

20
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/22&oldid=1444414" இலிருந்து மீள்விக்கப்பட்டது