பக்கம்:ஆத்மஜோதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 . ஆத்மஜோதி ரீ அரவிந்தரின் அதிமானச தத்துவம்

ಹಸಿಹಸ್ರನ! - புதுவை

அதிமானசம் என்ற உன்மை வெளிப்பட்டேயாக வேண்டு மென்பது, படைப்பின் தன்மையிலும் உலக உணர்வின் பரிணு மத்திலும், மறுப்பதற்கின்றி காணக் கிடக்கின்றது என்று பூரீ அரவிந்தரும்; இவ்வுலகில் அதிமா னச சக்தியின் வெளிப்பாடு வெறும் வாக்களிப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை, இப்பொழுது இங்கு அது உயிருடன் இயங்குமோர் சக்தி, பிறவிக் குருடனும் தெளிவாகக் காணவில்ல ஒர் உண்மை தத்துவம் என்று ஸ்ரீ அன்னேயார் அவர்களும் அருளியுள்ளார்கள். அருளொளியும் அகத்தொளி யும் பெற்ற பெரியோர்கள், பெயர் புகழுக்காகவும் பிறரை திருப்திசெய்வதற்காகவும் எதையும் சொல்வதோ செய்வதோ கிடையாது. தங்களுக்கு ஆத்மானுபவத்தின் மூலம் தோன்றும் அகக்காட்சிகளையும், சத்திய தரிசனங்களை யுமே உலகுக்கு அருளுகின்றனர். அவர்கள் காலத்தில் வாழும் மக்களால் அவர்கள் கூறுவதில் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் உண்மை இன்மையாகி விடாது; காலம் அதை நிரூபித்துக் காட்டு மென்பதில் சிறிதும் ஐயமில்லை. -

மனம் இறந்தநிலை, மனதிதநிலை தற்போதுள்ளமனம் தெய்வத்தன்மை அடைந்தநிலை, மனத்தைக் கடந்த ஆத்ம ஞானநிலை, இவையாவும் உயரிய ஆத்மானுபவ நிலைகளே என்றும் ஸ்ரீ அரவிந்தர் அதிமானச தத்துவம் என்று குறிப்பிடுவது இவற்றையன்று.

ஜடத்தில் உறங்கிக் கிடந்த பேருணர்வானது காலக்கிர மத்தில் மலர்ச்சியும் வளர்ச்சியு முற்று படிப்படியாக பல உணர்வு நிலைகளைக் கடந்து, உடல் உயிர், மனமாகப் பரிணமித்துள்ளது. அதே பேருணர்வானது. மீண்டும் பல உணர்வு நிலைகளைக் கடந்து அதிமானச தத்துவமாக பரிண மிக்கின்றது. , - .

இயற்கையன்னையின் மாபெரும் வேள்வியின், மகத்தான يط : " " தியாகத்தின் அயரா உழைப்பின், இடைவிடா முயற்சி யின் அரும் பெரும் பயன்தான் அதிமானச தத்துவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/32&oldid=1544640" இலிருந்து மீள்விக்கப்பட்டது