பக்கம்:அமிர்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளையாடும் சமயம் பார்த்துச் சாதம் ஊட்டினால்தான் கொஞ்சமேனும் சாப்பிடுகிறாள். மற்ற சமயங்களில் ஒரு பிடி அன்னம்கூடச் சாப்பிடமாட்டேன் என்கிறாள். தப்பித் தவறி அண்ணியின் போட்டோப் படத்தண்டை எடுத்துச் சென்றுவிட்டால் படத்தைப் பார்த்து விரலைக் காட்டி ‘அம்மா’ எனக் கதற ஆரம்பிக்கிறாள்!”

“பாவம், தாயில்லாக் குழந்தை. இந்த ஒரு வருஷம் பட்டதெல்லாம் கஷ்டமில்லை. ஆனால் இனித்தான் நமக்கெல்லாம் சிரமம் காத்திருக்கிறது. இனிமேல்தான் தவழும் பருவம்; அப்போது பேணிக் காப்பதுதான் ரொம்பவும் சங்கடம், நீயும்கூட இன்னும் சில நாளில் சென்னே போய்விடுவாய். என்னமோ ஈசன் விட்டவழி.”

இவ்விதம் பேசிக்கொண்டிருந்த டாக்டர், தன் தங்கை லலிதாவின் முகத்தை நோக்கினார். அவள் முகத்தில் சஞ்சல ரேகைகள் தடம் பதிந்திருப்பதைக் கண்டதும் அவர் கண்கள் கலங்கின.

“லலிதா, குழந்தை தூங்கி விழுகிறது. கொண்டு போய்ப் படுக்க வை” என்று சொல்லித் திரும்பவும் தன் அறைக்குச் சென்றார் சுந்தரம். அவரது கண்ணோட்டம் மேஜைமீது ஸ்டாண்டில் வைத்திருந்த புகைப்படத்தின் மீது லயித்தது. காஞ்சனா உயிருடனிருந்தபொழுது எடுத்த போட்டோ அது. அவளுடைய மென்மலர் வதனத்தில் அன்புக்குழி மிளிரப் புன்முறுவல் பூத்தவண்ணம் சல்லா மொழி பல பேசித் தன்னை ஊக்குவித்து வருவது போன்ற ஒரு பிரமை தட்டியது அவருக்கு.

டாக்டரின் மனம் கடந்ததை நினைத்து வருந்த, எண்ணங்கள் அலையலையாய் மிதந்து கண்வழியே நீர் முத்துக்களைச் சிதறின.

ல்யாணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும் படலத்தின் முதல் அத்தியாய ஆரம்ப தினம்!

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/42&oldid=1313460" இலிருந்து மீள்விக்கப்பட்டது