பக்கம்:அமிர்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பால் இருக்கிறது” என்றாள் சரளா, பாத்திரத்தை மேஜைமீது வைத்தவண்ணம். அவள் குரலில் தாபமிருந்தது; அடக்கம் இருந்தது.

“அது தான் தெரிகிறதே” என்றான் அவன். அவன் குரலில் விரக்தி, வறட்சி, கடுமை எல்லாமிருந்தன.

சங்கரன் சடக்கென்று ஓடி ரேடியோவை மூடினான். பாலினின்றும் ஆவி பறந்தது. அவன் மற்றுமோர் முறை நிமிர்ந்தான். இன்னும் சரளா நின்றபடி இருந்தாள். அவளது ரோஜாக் கன்னங்கள் குழைந்திருந்தன; வளமேறிய அவள் இளம் இதய வீணையில் உணர்ச்சி நரம்புகள் மீட்டிவிடத் தாபம் சுருதி கூட்டிற்று. தீராத தாபம் துளும்பக் கண்களில் மாறாத சோகம் துளும்பக் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“ஏ, என் கண்முன் நில்லாதே.” சங்கரன் உத்தரவிட்டான்; எரிந்து விழுந்தான்.

அணைக்கவிருக்கும் கை அடிப்பதைக் கண்ட குழந்தை எவ்வளவு வேதனையுறும்? சரளா அம்மாதிரி மனம் வெந்து போனாள். அரைக்கணத்தில் படியிறங்கினாள். கண்களில் நீர்த் துளிகள் முத்து முத்தாக உருண்டோடின.

‘படித்துப் பட்டம் பெற்ற கண்ணிறைந்த கணவர்; இங்கிதம் தெரிந்து தன்னைப் பராமரிப்பார்; வாழ்வும் சோபிக்கும்; இன்பக் கேளிக்கையில் வாழ்க்கை ஓர் சுவர்க்சுமாகத் திகழும்.

அன்று—சங்கரன் தன்னை உடந்தை யாக்கிக்கொண்ட பொன்னாளில் அப்படித்தான் அவள் தன் மன டைரியில் ‘கோட்’ எழுதி வைத்திருந்தாள்.

ஆனால், அவள் எண்ணியது நடக்கவில்லை. இந்த மூன்று மாதங்களில் தன் பதியின் விபரீத மனப்போக்கை, கணவன்—மனைவி என்ற பாசமின்றித் தாமரை இலைத்தண்ணீர் போன்று எதிலுமே ஒட்டாத நிலையைக் காணனகாணச் சாளா அதிர்ச்சி யடைத்தாள். பேதை யுள்க்ம் சுத்கல் சுக்கலாகச் சிதறியது. ஏன் - இந்தப் பிளவு? வேற்றுமை?

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/10&oldid=1354280" இலிருந்து மீள்விக்கப்பட்டது