பக்கம்:அமிர்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐயோ, வேண்டாம். விஷம் கலந்தது.” “என்ன, விஷமா?” “விஷம்...! ” சங்கரனுக்குத் தலை கிறுசிறுத்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லாம் சுழன்றன. சுவரின் மீது அரியா சனம் வகித்த வீனஸ்ராணி சுற்றினுள் ; சிரஞ்சிவிக் காதலர்களான சோமியோ-ஜூலியட்; லைலா-மஜ்னு சுற்றினர்கள். பாலில் விஷம் கலந்து தன் உயிரைப் போக்கிக்கொள்ள சரளா திட்டமிட்டு இருக்கிறாள் என்ற செய்தியை அவன் உணரலானன்; அதற்குக் காரணம் இதுவரை அவளைத் தான் புறக்கணித்ததே என்ற உண்மை புலனுனதும் நீர் வழிந்த கண்களால் தன் மனைவியை ஏறிட்டுப் பார்த்தான். அவன் பார்வை தன் தவறுக்கு மன்னிப்புக் கோருவது போலிருந்தது. “சரளா, என்னே மன்னிப்பாயா?” என்று கெஞ்சினன் சங்கரன்.

“மன்னிப்பா? அன்பரே, தாங்கள் அல்லவா மன்னிக்க வேண்டும். கணநேரத்து வெறி கற்பித்த மனமாற்றத்தில் தங்களை விட்டு விடுதலையடைய எண்ணிய என் தீச்செயலுக்குத் தாங்கள்தான் மன்னிக்கவேண்டும.”
“சரளா” 

அவன் அவளது சுருளலைபடிந்த கூந்தலைச் சரி்ப்படுத்தினுள்;அவள் நெஞ்சம் விம்மித் தணிந்தது. அத்தருணத்தில் சரளா அவன் இதயத்தில் ராஜ்யம் கடத்திக் கொண்டிருந்தாள். சங்சரனுக்கு அப்போதுதான் உயிர் திரும்பிற்று.

தன்வாழ்வில் துணைவர் ஏற்றிய தாம்பத்திய விளக்கை அஞ்சலி செய்து கொண்டிருந்தாள் சரளா!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/18&oldid=1193928" இலிருந்து மீள்விக்கப்பட்டது