பக்கம்:அமிர்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூரியன் அஸ்தமித்து இருள் எங்கும் படர்ந்தது.

சமையலறையில் செட்டியர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவர் மனைவி உணவு படைத்தாள். வெளியே குழந்தையின் அரவணேப்பில் காவேரி தன்னை மறந்திருக்தாள்.

அப்பொழுது கதவைப் ‘படபட’ வென்று தட்டும் சத்தம் கேட்டது. காவேரி குழந்தையை அணைத்தவாறு ஒடிக் கதவைத் திறந்தாள். திறந்த வழியினூடே “எங்கே அந்தச்செட்டி?” என்ற ஆவேசக் குரல் எதிரொலித்துப் பரவியது. .

மெல்லத் தலையை உயர்த்திப் பார்த்தாள்; குடல் நடுக்கமெடுத்தது. அங்கே பைத்தியம் பிடித்தவன் போல, கோபக் கனல் பறக்கக் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தான் மாணிக்கம். அதே சமயம் அந்த அம்மாள், செட்டியார் மனைவி கூறிய ‘ஜோஸியம்’ நினைவுக்கு வந்தது அவளுக்கு.

 “யாரு, காவேரியா?”
 “ஆமாங்க மச்சான்.” 
  “உனக்கு இந்த இரக்கமற்ற பாவி வீட்டிலே என்ன வேலை?’ என்றான் மாணிக்கம். அவன் கேள்வியில் சோளம் பொரிந்தது,

“மச்சான், சத்தம் போடாதீங்க. செட்டியாரு பெண் சாதி மகாலட்சுமி போல, அவங்க இல்லாவிடில் நானும் பிள்ளையும் செத்த இடங்கூட இந்நேரம் புல் முளைச்சுப் போயிருக்குமே! உங்களைப் பிடித்துக்கொண்டு போனதிலிருந்து கால் வயிற்றுப் பாட்டுக்குக் கூடத் திண்டாடிப் போய்விட்டேன். என்னமோ, நல்ல காலம் அந்த அம்மாவுக்குச் சேதி தெரிந்து என்ன அழைத்துப் போய் இது வரை காப்பாற்றினங்க’ என்று சொன்ன தன் மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட மாணிக்கம் சிலையாகிப் போனுன்.

21
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/23&oldid=1195327" இலிருந்து மீள்விக்கப்பட்டது