பக்கம்:ஆத்மஜோதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342. - ஆத்மஜோதி

பகவத் உபாசனையை மனே - வாக் - காயம் மூலம்

செய்வதால் சித்த சுத்தி உண்டாகிறது. மனம் ஒன்றை நாட வாக்கு ஒன்றை ஒத - காயம் ஏதோகிரியை செய்வ தால் சித்த சுத்தி ஏற்படி வழியில்லை. உபாசன பந்தத் தளையை நீக்கவே செயயப்படும் சாதனம் ஆகும். எனவே,

மாமன மன்னு வடமதுரை மைந்தனைத்............ 5 * துரியோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது வாயினுல் பாடி, மனத்தினுல் சிந்திக்க, போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசு ஆகும் ஸ்ரீ ஆண்டாளின் உறுதி மொழி. எல்லாn கருமத்தளைகளும் தீயில்பட்ட தூசுபோல் ஆகும்’ என்ற இம்மொழி உபநிஷத்தின் எதிரொவியாகத் திகழ்கிறது! 3.

யதா ஈவிகா துாலம் அக்னெள ப்ரோதம் ப்ரதுயேத ஏவம் ஹ அஸ்ய ஸர்வே பாப்மான: ப்ரதுர்யன்தே'

'நெருப்பில் இடப்பட்ட புல்லின் ஈர்க்கு எவ்வாறு எரிந்து போகிறதோ, அவ்வாறே, உபாஸ்கனுடைய எல்லா பாவங்களும் எரிந்து போகின்றன என்கிறது சாந்தோக்ய உபநிஷதம். ”。 -

அவ்வாறே கீதையும், "ஞானக்னி: ஸ்ர்வ கர்மாணி பஸ்மஸ்ாத் குருதே' 'ஞானத்தி எல்லாக் கருமத்தையும் சாம்பலாகச் செய்து விடும்' என்கிறது. போயபிழையும் புகுதருவான் நின்றனவும் ஆகிய கர்மத் தளைகள், தீயினில் துரசு ஆகும் - பஸ்மாத் குருதே' என்பவை ஒன்று க் கொன்று மொழி பெயர்ப்பு போன்று அமைந்து ள் ளது குறிப்பிடத் தக்கது!

- ஆண்டாளின் குறிக்கோள் ஆண்டவனை அடைவது அவனிடமிருந்து பிரியாது இருப்பது; அவனுக்கே கைங் கர்யம் - தொண்டு செய்வது - இதைத் தவிர வேறு எதுவும் அல்ல - என்கிறாள்:

- தொடரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/24&oldid=1544632" இலிருந்து மீள்விக்கப்பட்டது