பக்கம்:ஆடும் தீபம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சேதுவில்

பாலம்

திருக்கார்த்திகைக்குத் தீப மங்கள ஜோதி. அண்டமும் பிண்டமும், உயிர்ப்பும் உயிர்ப்பின்மையும், ஊழியும் ஆழியும், உருவமும் அருவமும் இடை வெட்டிய இருளைப் பிளந்து ஒளிப் புனலில் நீராடிக் களிக்கும் கன்னியராகி விட்டிருந்த அந்த நாளில், மானிடப் பெண்களெல்லாம் காளையராகி அதில் உள்ளத்தை வீழ்த்தி, வீழ்ந்து குழிந்து அந்த உள்ளத்திலே நெய்யும் இட்டுத் தீபம் எடுத்து உயிர்க் குலத்தின் மூச்சை ஜோதியாக எழுப்பிக் கொண்டிருந்த தீத்திருநாள்.

‘சோறு படைத்த சோழ நாடு’ என்று கூறுவதால் மட்டும் சோழ நாட்டின் பெருமையை முழுதுமாக அளந்துவிட முடியாது கங்கை நீரிலே ஒரு செம்பை மொண்டு, இது கங்கை’ என்று கூறுவதைப்போலத் தான் அது. கங்கை ஒரு செம்பு அல்ல. கங்கையை அளக்கின்ற-கொணர்கின்ற நம்சக்தி ஒரு செம்பின் அளவே என்பது தான் சரி. சோழநாட்டை அளக்க வந்தவர்கள் கையில் கொண்டு போனதெல்லாம் ஒரு செம்பே.நாம் கேட்டதெல்லாம் ஒரு செம்புக்கு உட்பட்ட சோழத்தைத்தான்.

இப்பொழுது நான் சொல்லப் போவது ஒரு செம்புக்கு மேற்பட்ட சோழநாட்டை அல்ல. ஏனென்றால் நான் ஓர் ஆராய்ச்சிக்காரன் அல்ல; எதையும் தைரியமாக மக்கள் முன்னே நிறுத்திப் பிரமிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/10&oldid=1408154" இலிருந்து மீள்விக்கப்பட்டது