பக்கம்:அமிர்தம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போடும் மாடு மாதிரி எங்காகிலும் சென்று வம்பளந்து காலத்தைக் கழிப்பதுதான் அவளது அன்றாட வேலை. ஆனல், காலையில் படுக்கையைவிட்டு எழுந்தது முதல் மீண்டும் படுக்கைக்குப் போகும் வரை உள்ள வேலை அனைத் தையும் உடல் நலியச் செய்யும் பாக்கியம்: எழைப் பூங்கொடி மீது விழுந்தது. இதற்குத்தான் செஞ் சோற் அறுக் கடன்’ என்ற பெயரா? மாடாக உழைத்து ஓடாகி விடும்படிதான் அன்று அவளைப் படைத்த பிரமன் அவள் தலையில் எழுதினை? அழிக்க முடியாத சிசஞ்சீவித்வம் வாய்ந்ததா அவ்வெழுத்து? ஐயோ! என்ன வஞ்சமோ அந்த ஈசனுக்கு!

அன்று ஒரு நாள்! அடுத்த ஊரிலிருந்து பாஞ்சாவியின் அத்தான் தங்கவேலு வந்திருந்தான். அவன் கடைக்கண் வீச்சில் பூங்கொடி விழுந்துவிட்டாள். அவளது வாளிப்பாக வளர்ந்திருந்த வனப்பு வாய்ந்த தோற்றப் பொலிவு தங்க வேலின் உள்ளத்தில் தனியிடம் பெற்றுவிட்டது. எப்படி யாகிலும் பூங்கொடியிடம் ஒரு வார்த்தையாகிலும் பேசிவிட வேண்டுமென்று துடியாய்த் இடித்தான் அவன்.

வந்த வேலையை முடித்துக்கொண்டு உடனே கிளம்பி விடும் தங்கவேலு, அங்கு இரண்டு நாள் தங்கினன். ஒரே அதிசயமாக இருந்தது பாஞ்சாலிக்கு.

நாட்கள் சென்றன. அவன் அடிக்கடி ஏதாகிலும் வேலையென்று 'சாக்கு'ச் சொல்லி அங்கு வந்து தங்கிவிடுவான். இவ்வளவிற்கும் தன் மாமன் மகள் பாஞ்சாலியுடன் ஒரு விடிை கூட மன அன்புடன் அவன் முகங்கெர்டுத்துப் பேசின்தில்லை.

தன்மீது தங்கவேலு காண்பிக்கும் தனிப்பட்ட சலு கையில் ஒருவித மனத்திருப்தி எய்தினுள் பூங்கொடி. ஆனால், அதே தருணம் அவர் நம்முடன் பேசும் சமாச் சாசம் பாஞ்சாவியின் பெற்றாேர்களுக்குத் தெரிந்துபோனுல் என்ன ஆவது நம் கதி அப்புறம் வயி ற்றுத் சோற்றுக்குக் கூடத் திண்டாட்டமாகவல்லவா போய்விடும்?’ என்ற

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/73&oldid=1319081" இலிருந்து மீள்விக்கப்பட்டது