பக்கம்:அமிர்தம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வந்துவிட்டுத்தான் போயிருக்கவேண்டும் என்று ஊகித்தவனாய், “வள்ளி, அன்னிக்கு உனக்குப் புடவைக்காகக் கொடுத்த அஞ்சு ரூபாயைக் கொடு. ஒரு அவசர ஜோலிக்கு வேனும், வார சனிக்கிழமை சந்தையிலே உனக்குச் சேலே வாங்கிக் கொடுத்துடறேன்” என்றான் தங்கவேல்.

வள்ளி விழித்தாள்.

“என்ன வள்ளி வாய் அடைச்சுப் போய் நிக்கறே?” “வந்து...அந்தப் பணம் ரெண்டு நாளைக்கு முன்னே காணுமப் போயிருச்சு-நீங்க...” என்று கரகரத்த குரலில் மென்று விழுங்கினாள் வள்ளி.

சற்றுமுன் தன் கண்முன் கண்ட காட்சி அவன் எரிச்சலுக்கும் ஆத்திரத்துக்கும் தூபமிட்டது. “அந்தச் சூதாடிப் பயலோடே இவளுக்கு என்ன பேச்சு?” என்று மனதிற்குள் பொறுமினான் தங்கவேல். அத்துடன் கோபம் தலைக்கேறியது. ருத்திரமூர்த்தியானான்.

“பொய்யா சொல்றே பொய் என்னை என்ன மூடன்னா மனசிலே நெனச்சிப்பிட்டே?” என்று வள்ளியின் கன்னத்தில் ‘பளீர்’ என்று அறைந்தான்.

கன்னத்தைத் தடவியவளாய் விம்மினாள் வள்ளி.

“என்னை மன்னிச்சிப்பிடுங்க. காசிலிங்கம் அத்தான். வந்து தன் மகளுக்கு உடம்புக்கு ஆகலைன்னு வைத்தியத்துக்கு அஞ்சு ரூவா கேட்டுச்சு. எங்களுக்கு அந்தக் காலத்திலே எவ்வளவோ ஒத்தாசை பண்ணியிருந்த அத்தான் இப்படிக் கெஞ்சிக் கேட்கிறப்ப ‘இல்லை’ன்னு சொல்ல எப்படி மனசு வரும்? எனக்குப் புடவைக்குக் தந்த பணத்தை அப்படியே கொடுத்துட்டேன்...” என்று கூறினாள் வள்ளி.

வாழ்க்கை விசித்திரம் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, தான் செய்த தவறை உணர்ந்தவன்போலத் தின் மனைவியை நோக்கினான். தன் மாமன் மகளுக்கு எப்படித் தான் பணம் கொடுத்து உதவ விரும்பினானோ, அதேபோல் அவளும் தன் அத்தானுக்குச் சமயத்தில்

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/53&oldid=1444415" இலிருந்து மீள்விக்கப்பட்டது