பக்கம்:அமிர்தம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

    பெண் உள்ளத்தில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. தன் தந்தை தன் மீது காட்டிய அன்பைத் திரும்பவும் எண்ணும்போதெல்லாம் அவள் மனம் கருகிச் சாம்பலாகி விடுவதுபோன்ற உணர்வு எழ ஆரம்பித்தது. இறுதியில் அவள் தகப்பன் விட்டுச் சென்ற பணத்தையும் பங்கிட்டுக் கொள்ளச் சொந்தமுறை கொண்டாடிக்கொண்டு வந்தார்கள் சிலர், கொஞ்சமிருந்த பணத்தையும் பறிகொண்டுவிட்டது அக்கும்பல். பாவம், பூங்கொடியின் எதிர்கால வாழ்வு?
     தனி மரமானாள் பூங்கொடி. கடவுளின் கருணைக் கண்கள் தன்மீது விழாதா என ஏங்கித் துவண்டாள். அந்தச் சமயம் தான் அவளுக்குச் சிறிது நிம்மதி ஏற்பட்டது. அந்தச் செய்தியைக் கேட்டதும்.
      பக்கத்து ஊர் மாடசாமிக் கோனார் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டார். அவாது குடும்ப விளக்கு அணை பப்போகும் தருணத்தில், சுடரைத் தூண்டி விட்டுப் பிரகாசமெய்தச் செய்தவர் பூங்கொடியின் தந்தை தான்.
    'நம் குடும்பத்தைக் கைதூக்கிவிட்டு முன்னுக்குக் கொண்டுவந்த அந்தப் புண்ணியவானுடைய பெண் அனாதர வான நிலையில் தெருவில் அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு, ' நாம் கவனியா திருந் தால் ஊரில் என்ன. பேசிக்கொள்வார் கள்?' என்ற அந்த ஊரின் வசைச் சொல்லிற்காக அவளை அங்கு அழைத்துக்கொண்டார்.
     அவருக்கும் ஒரு பெண் இருந்தாள். பாஞ்சாலி  என்று பெயர். இருவருக்கும் கிட்டத்தட்ட சமவயது. ஆனால், அழகில் பாஞ்சாலி - எவ்விதத்திலும் பூக்கொடிக்கு ஈடாகவே முடியாது. அவ்வளவு அழகி பூங்கொடி. இருந்து - என்ன செய்வது? அது தான் அவளது அழகிற்கு வறுமை திரையிட்டுவிட்டதே? 
     பாஞ்சாலி வீட்டு வேலை ஒன்றும் செய்யமாட்டாள். வாய் நிறைய - வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு, அதை

70

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/72&oldid=1333179" இலிருந்து மீள்விக்கப்பட்டது