பக்கம்:அமிர்தம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைத்தியரை அழைத்து வந்து காண்பித்தான். கேட்கும் பணத்தைத் தான் தருவதாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டான். வேறு வழி?

குழந்தையின் ஆபுசுக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாது என்று உறுதி கொடுத்தார் வைத்தியர், நாடியைப் பரிசோதித்தபின். சூரணம் ஒன்றைத் தேனில் குழைத்துக் குழந்தைக்குக் கொடுக்கவே அது மெதுவாகக் கண்களைத் திறந்து விழித்தது. சந்தோஷ மிகுதியில் பொன்னுருவிக்குத் தலைகால் புரியவில்லை.

ஆனால் மறுகணம் அவளது ஆனந்தம் அழுகையாக மாறியது. தான் பார்த்த காட்சியைக் கண்டு அலறி விட்டாள் பொன்னுருவி. இடுக்கியில் அகப்பட்ட மீன் போலத் துடிதுடித்துப் போளாள், ஏனென்றால், போலீஸ்காரன் ஒருவன் பின் தொடா வந்து நின்றான் அவள் கணவன் காசிலிங்கம்.

“ஊம், ஜல்தி பண்ணு,ஸ்டேஷனுக்குப்புறப்படனும்” என்று அதட்டினான் போலீஸ் ஜவான்.

சீட்டு விளையாட்டின் விளைவே இந்த இக்காட்டான நிலைக்கு, போலீஸ் கையில் சிக்கும் அளவிற்குக் கொண்டு வந்து விட்டது என்பது புலனாயிற்று பொன்னுருவிக்கு.

“இருங்க ஐயா, உடம்பு காயலாகக் கிடக்கும் என் மகளே ஒரே ஒருதரம் மாத்திரம் பார்த்துட்டு வந்துடுறேன்!” என்று கெஞ்சினான் காசிலிங்கம்.

“போலீஸ்கார ஐயா, இந்தத் தடவை மட்டும் அவரை மன்னிச்சிடுங்க பெரிய மனசு பண்ணி. இனிச் சீட்டைக் கண்ணுலே கூடக்காண மாட்டாது காசிலிங்கம். நான் அதுக்கு ‘ஜாமீன்’!” என்று அழுத்தமாகக் கூறிய தங்கவேல், காசிலிங்கத்தையும் போலீஸ்காரனையும் மாறி மாறிப் பார்த்தான். முறுவல் பூத்தது இதழ் ஓரத்தில், பொன்னுருவியின் கண்களில் கண்ணிர் நிறைந்து வழிந் தோடிக் கொண்டிருந்தது. ஆனால், போலீசைக் கொண்டு காசிலிங்கத்தை மிரட்டிவைத்தால்தான் ஒரு வழியாகச்

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/55&oldid=1310399" இலிருந்து மீள்விக்கப்பட்டது