பக்கம்:அமிர்தம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“ஆ, மாணிக்கமா?” என்ற அவள் ஓலம் ஓசை எழுப்பி எதிரொலித்தது. கண்மணிக்குத் திகைப்பு. மேலிட்டது. நல்ல வேளை, அவன் ஒதுங்கினான்.

"மாணிக்கம், என்ன இப்படி இந்தக் கும்மிருட்டிலே, வத்திருக்கிங்க. கொஞ்சம் உங்களை கவனிக்காமப்போயிருந்தால் எம்பிட்டு வினையா முடிஞ்சிருக்கும்?"

“பூவாயி, உனக்கும் உன் புருசனுக்கும் ரகசியம் ஒண்ணுமே தெரியாதாங்காட்டியும். உங்க எதிரிகள் அல்லாரும் உன் புருசனை அப்படியே அடிச்சுப்போட யோசனைபண்ணி ஆட்களைச் சேர்த்திருக்காங்க. சாயந்திரம் தான் சேதி விழுந்துச்சு. ஒடியாந்தேன், உங்ககிட்ட சொல்றத்துக்கு. ஐயனாரு புண்ணியத்திலே தான் தப்பிச்சுட்டேன்......” என்று இழுத்தான் மாணிக்கம்.

அப்பொழுது கொஞ்சம் தொலைவில் விளக்கு. வெளிச்சமும் ஒரு சிலர் வருவதும் தெரிந்தது. ‘ஒருவேளை, வடிவேலு கோஷ்டியாத்தான் இருக்கும்’ என்ற ஐயத்துடன் கண்மணி விரைந்தான் எதிர் நோக்கி, மாணிக்கமும் பூவாயியும் பின் தொடர்ந்தனர்.

“அண்ணாச்சி, உங்களை எங்க ஐயா வடிவேலு. அழைச்சுக்கிட்டு வரச் சொனாங்க. என்னமோ சமாசாரம் சொல்லனுமாம்” என்று ஒருவன் ஓடிவந்து கூறினான்.

“ஏலே, ஒன்னை எனக்குத் தெரியுமடா. என்னை வஞ்சகமாக் கொல்லச் செய்யற சூழ்ச்சியிலே இதுவும் ஒரு வழியாக்கும்! யாருகிட்டே கயிறு திரிக்க உத்தேசம்?“ கண்மணியின் வார்த்தைகளில் கோபம்பொரிந்தது; எரிமலை வெடித்தது; பிரளயம் புரண்டது.

“அண்ணாச்சி, ஐயனருமேலே ஆணையாச் சொல்லுறேன். நீங்க எதுவும் சந்தேகப்படாதிங்க. வடிவேலு எசமானுக்கு வழியிலே தேள் கொட்டி ரொம்ப தடபுடலாயிருக்கு. ஐயனாரு சோதனைதான் இப்படி சேர்ந்திருக்குன்னு பேசிக்கிறாங்க.”

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/95&oldid=1320966" இலிருந்து மீள்விக்கப்பட்டது