பக்கம்:அமிர்தம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டிருந்த அவன், காவிரிக் கரைக்குச் சென்றாலாகிலும் மனதிற்குச் சிறிது சாத்தி பிறக்குமே என எண்ணி, அங்கு சென்றான்.

அப்பொழுது இருள் லேசாகப் பட ஆரம்பித்தது. நொங்கும் நுரையுமாக ஆரோகணித்துச் சென்றுகொண்டிருந்த காவிரியின் அழகிலே லயித்திருந்த கந்தன், இடுப்பில் செருகியிருந்த குழலை எடுத்து ஊத ஆரம்பித்தான். குழலின் இன்பதேகம் இளங்காற்றில் மிதந்து சென்றது. அலைபுரண்டோடும் வெள்ளத்தின் இனிய சலசலப்பு அச்சமயம் அவன் எழுப்பிய உயிர்காதத்திற்குச் சுருதி கூட்டுவதுபோலிருந்தது.

திடீரென அவனது குழலிசை தடைப்பட்டது. நீரின் சலசலப்புக் கேட்டுத் திரும்பினான். அந்த இருட்டு வேளையில் நீரினாள் இறங்கும் உருவம் ஒன்றின் நிழல் தென்பட்டது. விசித்தெழுந்து ooடிச் சென்றான். நீரில் இறங்கிய உருவம் அப்போது தோன்றி மறைந்த மின்னொளியில் நன்கு தெரிந்ததும், அப்படியே அவன் பிரமித்துவிட்டான்.

தன் உயிரைப் பணயம் வைத்து ஒற்றைச்சாண் வயிற்றைக் கழுவி மூட, உச்சாணிக் கம்பில் ஏறி வேடிக்கை செய்து முடித்த பின்னர் அன்று தனக்கு இரண்டணா மனமுவந்தளித்த அதே உருவம்; அவளும் பார்த்தாள். அவள் பார்வையில் துடிப்பின் வேகம் அதிகரித்தது. அவளும் அவனை யாரென்று அறிந்துகொண்டாள் என்பது அவளது முகபாவனையிலிருந்து தெரிந்தது.

‘இவ்வளவு கும்பிருட்டிலே ஒண்டியாக அலை பாய்ந்து ஓடும் ஆற்றிலே இறங்கவேண்டிய காரணம்?’-அவன் யோசனை செய்தான்.

“ஐயா, இன்னும் ஒரு கண் சிமிட்டுற நாழி களிச்சு நீங்க வந்திருந்தீங்கண்ணா எம்மனசு எம்பிட்டு குளுத்து போயிருக்கும்?”

அவ்விதம் சாரமற்றுப் பேசும் அப் பெண்ணினது வார்த்தைகள் அவனுக்கு வியப்பைக் கொடுத்தன.

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/69&oldid=1313454" இலிருந்து மீள்விக்கப்பட்டது