பக்கம்:ஆடும் தீபம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

173


அல்லி பார்வையை நிலை நிறுத்தியபோது, பாய்ந்து வந்த ஒளி வெள்ளத்தில் பரந்து கிடந்த ரத்தத் துளிகளுக்கு ஊடாகக் கிடந்த அவ்வுருவினைக் கண்டாள்.

  • தாமரை!...தங்கச்சி தாமரை!’ என்று கூவினாள்.

“என் செந்தாமரைக்கு என்ன ஆச்சு அல்லி..?’ என்று வினவியவாறு பறந்து வந்தான் கண்ணப்பன்- செந்தாமரையின் அத்தான்.

நாடிக்குழலே நாடிப் பாய்ந்தது அந்தப் பத்து ரூபாய் நோட்டு!

அப்போது தான் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டது போல ஓர் உணர்வு ராஜநாயகத்திற்கு ஏற்பட்டது; கை நழுவிப்போன பொருள் கைசேர்ந்தது மாதிரி அவருக்கு மகிழ்ச்சி பிறந்தது. விலகிப்பிரிந்த பாசம் இளகிப் பரிந்து வந்தது. தெய்வமே, தாமரையின் உதவியால் என்னை மீண்டும் அடைந்த என் மகள் அல்லியை என்னிடமே நிரந்தரமாக இருக்கச் செய்து விடு, அப்பனே!” சிரிப்பொலியும் கையோசையும் இணைந்து வந்தன.

நடையில் நின்றவாறு உள்ளே பார்த்தார் நடன வாத்தியார்,ஜன்னல் கம்பிகளினூடே அவரது கண்ணோட்டம் பிளந்து பாய்ந்தது.

  • தாமரை நான் இனி இங்கே இருக்க விரும்பவில்லை; ஊருக்கும்போக ஒப்பவில்லை. உயிர்மாண்ட சாத்தையன் சிறைப்பட்ட இன்னாசி ஆகியவர்களின் உறவுக்காரர்கள் ஏதாவது தொல்லை கொடுப்பார்கள்: சஞ்சலத்தைச் சுமந்து கொண்டுவந்த நான் திரும்பவும் சஞ்சலத்துடனேயே மாங்குடியை மிதிக்க எனக்கு மனம் இடம்தரமாட்டேன் என்கிறது”

அப்பாலே உன்னோட முடிவு என்ன?...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/174&oldid=1389304" இலிருந்து மீள்விக்கப்பட்டது