பக்கம்:ஆடும் தீபம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




பொறி பதினொன்று:


வாழ்க கனவு!....
நனவு வாழ்க!

உயிர்த்திரட்சியின் அணுக்களில் ஏற்பட்ட குலை நடுக்கம் இன்னமும் அடங்கவில்லை. உந்திக்கமலம் வெளியேற்றிய நீள்மூச்சுவிழிஇணையில் சுடுநீரானது.நெஞ்சம்விம்மியது; மனச்சான்று கண்ணீர் வடித்தது. நினைவுகள் ஆற்றாமையினால் தத்தளித்தன. கனவுகள் மேற்படி நினைவுகளின் காலடியில் தஞ்சம் அடைந்து கதறிக்கொண்டிருந்தன. ஆனால், அவள் மட்டும் அழவில்லை! ஆம்! அல்லி அழவே இல்லை!

அவளுக்குப் பதிலாகத்தான் செந்தாமரை அழுதாளா? அவள் ஏன் அழுதாள்? அவள் எதற்காக அழ வேண்டும்? கண்ணீருக்கு நட்பு உண்டுதானோ? கண்ணீரில் பாசம் உள்ளடங்கிக் கிடப்பதென்பதும் மெய்தானோ?

“செந்தாமரை!’ என்று அழைத்தாள் அல்லி. தோழி தோழியைத் தொட்டுத் தட்டிக் கூப்பிட்டாள். இமைகளின் கதவுகளை மூடாமல்,மூடமனமின்றி. மூடவழியின்றி நின்றாள் செந்தாமரை. அவள் பார்வையின் உணர்ச்சிக் குறிப்புக்கள் அத்தனையும் அல்லியையேபடையெடுத்துக் கொண்டிருந்தன; எடை போட்டபடி இருந்தன.

“அல்லி அக்கா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/170&oldid=1389287" இலிருந்து மீள்விக்கப்பட்டது