பக்கம்:ஆடும் தீபம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஆடும்


உடலைச் சிலுப்பிக் கொண்டாள் அல்லி. அருணாசலத்தை. நோக்கி அவள் வீசிய புன்னகை, தொடுவானில் அப் பொழுதுதான் கிளம்ப ஆரம்பித்திருந்த தண்கதிரைப் போல் குளிர்ந்திருந்தது. நேரமாகி விட்டது; போகலாமா? ’ என்றாள் அல்லி. ஓ.போகலாம், அல்லி.’

அருணாசலம் புறப்பட்டுவிட்டான். காரில் செல்கையில் “ஏன் அல்லி, ஒரு மாதிரியாய் இருக்கிறே? உனக்கு நடிப்பதில் திருப்திதானே’ என்று கேட்ட அவனுக்குஒரு சிறு தலையசைப்பின்மூலம் விடையிறுத்த அல்லியின் உள்ளம் அவளை மீறியதொரு நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. உணர்ச்சியின் எல்லையை அடையுங், கால் அங்கு சொல்லுக்கு இடமேது? நெருங்கி வருவது இன்பமோ துன்பமோ, எதுவென்றே உணராத நிலையில். மெளனமே அவளுக்குத் துணையாக நின்றது.

கலைக்கூடத்தின் வாயிலில் கார் நின்றதும்தான் இரவின் திரை உலகை மூடிவிட்டதை உணர்ந்தாள் அல்லி.ஏதோ பிழை செய்துவிட்டாற் போன்றதொரு உள்கூச்சத்துடன் படியேறினாள் அவள். கூடத்து வாசற்படியருகிலேயே வெற்றிலைப் பெட்டி சகிதமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்த ராஜநாயகம் அவளுடைய தவிப்பைக் கண்டதும் ஒரு புன்னகை பூத்தார். பொருள் பொதிந்த அப் புன்னகையின் விளக்கத்தை உணர்ந்துகொண்ட அல்லிககு, அவர் தன்னைக் கடிந்து கொண்டிருந்தால்கூட அவ்வளவு வேதனை ஏற்பட்டிராது என்றேதோன்றியது.

அல்லி மாடிப்படிகளில் ஏறுகையில் மேலேயிருந்து.காமினி,திலோத்தமா,நீலா, கல்யாணி ஆக நால்வரும் இறங்கிவந்து கொண்டிருந்தனர்.அன்று கன்றுப் பொங்கலல்லவா?மாலையில் கலைக்கூடத்தில் விசேஷ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/75&oldid=1301714" இலிருந்து மீள்விக்கப்பட்டது