பக்கம்:ஆடும் தீபம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

177


தளத்தில் எழிலரசி அல்லி ஆடினாள்; மனம் அதிர ஆடினாள். பட்ட துன்பங்களை எட்டி மிதித்து வெற்றி கொண்ட எக்காளத்தில் ஆடினாள்; கானலாகி, விட்ட கனவுகளை மறந்து ஆடினாள்; முக்காலத்தையும் மோனத்தவத்துள் அடைத்துக் கொண்ட துறவு நிலையில் நின்று ஆடினாள் அப்பா!’ என்ற பாசமிகு அழைப்பு ஒன்றுடன் ஆடினாள்; தெய்வத்தின் திருமுருகு தீபமும் ஆடியது.

“அத்தான்!’

அவள் தான் அழைத்தாளா..?யாரை அழைத்தாள்?

அல்லி தலை நிமிர்ந்தாள்; பார்த்தாள்; அதிர்ந்தாள்;

அருணாசலம் நின்றான், விழிப்புனல் வழிந்தோடிக் கொண்டிருந்தது கனவா இது?

தீயோன் இன்னாசியின் கெட்ட சகவாசத்தினால் அவன் அடைய வேண்டிய தண்டனையில் அருணாசலமும் பங்கு பெற்றான். சட்டம் அவன் கைகளுக்கு விலங்கிட்டது. ராஜநாயகம் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்ததை அல்லி அறிந்திருந்தாளோ, என்னவோ?

‘அல்லி, உன்னை ஒருமுறை பார்க்க வேண்டுமென்று இருந்தது. அதிகாரியின் உத்தரவைப் பெற்று வந்திருக்கிறேன். உன் கண்ணீருக்கு மத்தியில் பிரிய தேர்ந்த நான் இப்பொழுது உன் சிரிப்புக்கு ஊடாகப் பிரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்ன நான் உணர்ந்து கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டேன். அல்லி. இனி நான் மனிதனாக வாழ்வேன்!!!

நீங்கள் இப்போது ஏன் வத்தீர்கள்?:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/178&oldid=1389335" இலிருந்து மீள்விக்கப்பட்டது