பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

25



நமக்கு நேர்ந்த அவமானத்தை வெற்றிக்கொள்ள, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என்னை அவமானப்படுத்தியவர்களைத் தண்டிக்க ஒரே வழி அவர்கள் வெட்கப்படும்படியாக வென்று காட்ட வேண்டும் என்பதுதான். திறமையுள்ளவர்கள் அவர்கள் என்றால், அவர்களுக்கும் மேல் நான் திறமைசாலி என்று நிரூபிக்க வேண்டும் என்று அதை லட்சியமாக ஏற்றுக் கொண்டேன்.

அவமானத்தைத் தந்த அசிங்கமான பேச்சுக்களால் புண்ணாகிப் போன, நெஞ்சுக்கு, என் லட்சிய வெறி இதமாக இருந்தது. கடுமையான பயிற்சிகளின் முன்னே, அவமானம் கால் இடறி ஒடியது. அவமானப்படுத்தியவர்கள் என் வெற்றியைப் பார்த்தார்கள். கல்லூரி சேம்பியன் ஆனேன். புது சாதனைகளைப் படைத்தேன். வேறு வழியில்லை என்று ஒரு முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

பிறகு அவர்கள் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்களை வெற்றி கண்ட என் முயற்சியின் விளைவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பாட்டுப் போட்டியில், கட்டுரைப் போட்டியில், பேச்சுப் போட்டியில் வெற்றி, என் கட்டுரையைப் படித்து தமிழ்த்துறை பேராசிரியர் எனக்கு பின்னாளில் நண்பரானார். என் நடகத் திறமையை அறிந்து காரைக்குடி முற்போக்கு நடக மன்றத்தினர் என்னை அவர்கள் குழுவில் சேர்த்துக் கொண்டனர். அதுவே என்னை சென்னைக்கு இடம் பெயரச் செய்து, இன்று ஒரு சினிமா படம் எடுக்கும் நிலைக்கு என்னை உயர்த்தித் தந்திருக்கிறது. -

என்னை அவமானப்படுத்திய தோழர்கள் எல்லாம், எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள். அறிமுகமே இல்லாதவர்களிடத்தில் இருந்து அவமானம் எப்படி வரும்? அதுதான் சூழ்நிலை பொறாமை நெஞ்சுக்கு காரணம் தேவையே இல்லை.

தெரிந்து கொள்ளாதர்களிடத்திலிருந்தும், புரிந்து கொள்ளதவர்களிடத்திலிருந்தும் எதிர்ப்புகள் வரும். எதிர்ப்பை ஏளனப்படுத்துவதன் மூலம்தான், வெளிப்படுத்தி, எரிச்சல் ஊட்டுவார்கள். புண்படுத்துவார்கள்.