பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

33



எனது வீட்டிற்குள் போக வேண்டுமானால், ஒரு செருப்புக் துடைக்குள் புகுந்துதான் போக வேண்டும்.

என்னுடைய மோட்டர் சைக்கிளை வீட்டின் முன்புறத்துக் கொண்டு செல்ல வேண்டுமானால், அவர்கள் கடையை அடைக்கிறவரை காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அவர்கள் கடை திறக்கும் நேரம் காலை 6 மணி மூடும் நேரம் இரவு 11 மணி. -

நான் அதற்குள்ளாக காலையில் விழித்து வண்டியை வெளியே கொண்டு வந்து விடவேண்டும். இரவு கண்விழித்திருந்து வண்டியை உள்ளே கொண்டு செல்ல வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலை எனக்குக் கஷ்டம்தான். இருந்தாலும் இந்தக் கஷ்டமான சூழ்நிலைதான். எனக்கு இஷ்டமான சூழ்நிலையாகி விட்டிருந்தது.

அதாவது கடைக்காரர்களின் உழைப்பு, கடினமான உழைப்பு, முகத்தில் சோர்வு இல்லாமல் உடலில் களைப்பு தெரியாமல், ஏறத்தாழ 17 மணி நேரம் உழைக்கிற உழைப்பு என்னை உசுப்பி விட்டிருந்தது.

உத்தியோகம் பார்த்து என்ன கிழித்திருக்கிறோம்? பத்தாத சம்பளம். பட்டியல் போட்டு வரவு செலவு. பட்ஜெட்டான வாழ்க்கை முறை.

நாமும் தொழில் செய்தால் என்ன?

படித்துவிட்டு உத்தியோகம் பார்ப்பதுதானே கெளரவம். பெருமை. வியாபாரம் செய்வது வெட்கக் கேடல்லவா! யார் உங்களை மதிப்பார்கள்?

இப்படி எண்ணி எண்ணித்தான், அறிவும் திறமையும் உள்ளவர்கள்; படித்துப் பட்டமும் பெற்ற பலர், பாழாகிப் போயிருக்கிறார்கள்.