பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

“உங்கள் வீட்டு மொட்டை மாடியிலே உன்னேப் பார்த்திருக்கிறேன். இங்கே குளிா்ச்சியாக இல்லை?”

ஜூடி கால்விரல்களைப் புல் தரையின்மேல் வைத்தாள். தண்ணீா் பாய்ந்து அது இன்னும் ஈரமாக பாய்க்து அது இன்னும் ஈரமாக இருந்தது. “இங்கு நன்றாயிருக்கிறது” என்ருள் ஜூடி.

எத்தனையோ பொருள்கள் ஜூடியின் வீட்டிலிருந்து தொியாமல் மறைந்திருந்தன. குட்டைத் தென்னை மரங்கள் மறைத்துக்கொண்டிருந்தது. அதற்கு ஒரு காரணம். அம்மரங்களின் அடிப்பகுதி சில அடி உயரத்திற்கு மேலில்லை. தங்க நிறமும் மாநிறமும் கலந்த காய்கள், குறித்த பருவமென்றில்லாது ஆண்டு முழுவதும் முதிர்ச்சியடைந்து கொண்டிருந்தன. ஓரிடத்தில் சிறிய கூரைவீடு ஒன்று இருந்தது. அதன் மேலே முலாம்பழக் கொடிபடர்க்திருந்தது. துாய்மையான வேட்டி கட்டிக்கொண்டிருந்த ஒருவன், முன் பக்கத்தில் பால் கறந்து கொண்டிருந்தான். கீழே குந்தியமர்ந்து கால்களுக்கிடையே பளபளப்பான ஒரு உலோகப் பாத்திரத்தை வைத்து இடுக்கிக்கொண்டு அதிலே அவன் பாலைக் கறந்தான். பசுவுக்குப் பக்கத்திலே அதன் கன்று காத்திருந்தது. கடைசியில் அதற்குப் பால் ஊட்டக் கிடைக்கும். தாயும் கன்றும் வெள்ளை நிறத்திலே அழகாக இருந்தன. சென்னை நகரத்து வீதிகளிலே திரியும் பசுக்களைப் போல இவை அவ்வளவு மெலிந்திருக்கவில்லை. கோடைக்காலத்தின் மத்தியிலே பசுக்களுக்குப் பச்சைப் புல் கிடைக்காது. அவை பெரும்பாலும் வைக்கோலைத் தின்றே வாழ்ந்தன. ஆனால் அந்த அம்மாளின் பசுக்களுக்கு நல்ல உலர்ந்த புல்லும், தோட்டத்திலிருந்த காய் கறிச் செடிகளின் தழைகளும் கிடைத்தன. கன்றுக்கு நிறையப் பாலிருக்கும்படி விட்டுவிட்டுப் பால் கறப்பவன் தன் வேலையை முடித்தான். அந்த அம்மாள் பசுவினிடம்