பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஆலேக் கரும்பு 'வெள்ள லேக் கைககளைக் கொட்டி முழங்கும் கடலினே.” அவர் கண்ணுக்கு அப்படிப் பட்டது. - * கவிஞருக்குக் கவிஞர், பக்தருக்குப் பக்தர் என்று சொல்லும் தகுதி வாய்ந்தவர் ஒருவர் இருந்தார். அவருக்குக் கவி குஞ்சரம் என்று பெயர். உணர்ச்சி. யுள்ள கவிகளைப் பாடும் பெருமான் அவர். * . . . ஒருநாள் மாலையில் வயற்காட்டுப் பக்கம் போய்க் காலாற நடந்துசென்று தென்றலே நுகர்ந்து வரலாம் என்று புறப்பட்டார். ஒரு கரும்புத் தோட்டத்தின் வழியே சென்ருர் கரும்பு கன்ருக முற்றி விளைந்திருந்தது. வயசு முதிர்ந்தால் தலே கரைத்துவிடுகிறதல்லவா? கரும்பும் ஆயுசு முதிர்ந்தால் பூத்துவிடும். அதன் பூ அதன் வாழ்வுக்கு இறுதி கட்டியதை அறிவிக்கும் அடையாளம். கரும்பு முதிர்ந்துவிட்டமையால் அங்கே ஓரிடத்தில் ஆலேயமைத்துக் கரும்பைப் பிழிந்து கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி வெல்லம் உண்டாக்கினர்கள். கவிஞர் கரும்புத் தோட்டத்தைப் பார்த்துக்கொண்டே வந்தவர், ஆலக்கும் வந்தார். கொப் பரையிலே கருப்பஞ்சாற்றைக் காய்ச்சிக்கொண்டிருந்த காட்சியைப் பார்த்தார். அந்த இட முழுதும் வெல்லப் பாகின் மணம் நிரம்பியதாக இருந்தது. பிறகு ஆலயடிக்கும் இடத்துக்குப் போனர் கரும்பைச் சக்கை வேறு சாறு வேருக அந்த ஆலே பிழிந்துகொண்டிருந்தது. மாடுகள் ஆலேயைச் சுற்றி ஆலத் தண்டை இழுத்துச் செல்ல, ஒருவர்கரும்பை ஆல்யினிடையே கொடுக்க, அதிலிருந்து கடகடவென்று கருப்பஞ்சாறு வந்து கீழுள்ள பாத்திரத்தில் விழுந்துகொண்டிருந்தது. கவிஞர் எல்லாவற்றையும் பார்த்தார். கரும்பை ஆலேயிலே கொடுத்த பிறகு அது உருளைகளினிடையே சென்று சுங்கித் தன் உருவம் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/8&oldid=744447" இலிருந்து மீள்விக்கப்பட்டது